தலவாக்கலையில் இன்று காலை சுமன சிங்கள வித்தியாலயத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் பாதசாரிகளை குளவிகள் தாக்கியுள்ளது.

கூமூட் பௌத்த விகாரை பிக்கு உட்பட நால்வர் குளவி தாக்குதலுக்கு இழக்காகி அருகில் உள்ளவர்களின் உதவியுடன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவி கூடே இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிக்கப்பட்ட இவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(க.கிஷாந்தன்)