பாராளுமன்றத்தில்   எம்.பிக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதல்; தொடர்பிலான  விசாரணை அறிக்கை சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரியவிடம், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவினால்  கையளிக்கப்பட்டது.

முன்னாள் ஜனா­தி­ப­தியும், தற்­போ­தைய குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரா­ணு­வபாது­காப்பு நீக்­கப்­பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி­யி­ன­ர் நேற் பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாய்த்த­ர்க்கம் திடீ­ரென கைக­லப்­பாக மாறி­யது.

இதன்­போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா மண்­ட பத்தின் மத்­தியில் ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்கி­ய­துடன், கட்டி­பு­ரண்டு சண்­டை­யிட்­டனர். இதனால் சபை அல்லோல கல்லோலமானது.

தாக்குதலுக்குள்ளான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.