மாலபே - கோட்டை வரை நவீன இலகு புகையிரத சேவை

Published By: Vishnu

03 Jul, 2019 | 09:46 PM
image

(நா.தினுஷா)

மாலபே - கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரையிலான நவீன இலகு புகையிர போக்குவரத்து பாதையின் நிர்மாண பணிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுமுதல் ஆரம்பமாகவுள்ளது. 

 

இந்த நிர்மாண பணிகளுக்கு ஜப்பான் நாட்டு தொழில் நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு எதிவரும் 2024 -2025 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்த புகையிரத பாதை நிர்மாண பணிகளை நிறைவுசெய்ய முடியும் என எதிர்பாரக்கப்படுனகிறது.

இந்த மாலபே - கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரையிலான இந்த இலகு புகையிர சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்ற கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. 

பாரிய நகரம் திட்டமிடல் மற்றும் மேல்மாகாண அகபிவிருத்தி அமைச்சர் சம்பி ரணவக்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க , இராஜாங்க அமைச்சர் அசோக அபயசிங்க , இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் எச்.ஈ.அகிரா சுகியாமா , மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலநதுக்கொண்டனர்.

மாலபே - கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த இலகு போக்குவரத்து பாதையின் நிர்மாண பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் தற்போதைய பயண நேரமான 45 - 90 வரையான நேரத்தை 32 மணிநேரம் வரையில் வரையறுத்துக்கொள்ள கூடியதாக இருக்கும். 

தற்போது வீதி போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும்  பிரதான பாதையில் மேம்பாலங்களை நிர்மாணிப்பதனூடாக இந்த புகையிரத சேவையை அமுல்படுத்த எதிர்பாரக்கப்படுகிறது. இந்த இலகு போக்குவரத்து சேவைக்கென்று ஜப்பான் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சொகுசுடைய மின்சார புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50