வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

03 Jul, 2019 | 05:10 PM
image

வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர் 

யாழ் நாவலர் வீதியிலுள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகம் முன்பாக  இந்தப் போராட்டத்தை மேறகொண்டதுடன் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு ஆளுநருக்கும் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விசேட மாகாண கணக்காய்வு குழுக்கூட்டம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருவதற்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இவ்வாறான தவறுகள் எதிர்காலத்திலும் நிகழாவண்ணம் ஸ்திரப்படுத்தப்படல் வேண்டுமென கோரியுமே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இவ்வாறான சம்பவங்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிக மன வேதனையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் கவலை வெளியிட்டதுடன் இந்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27