வெசாக் தானசாலைகள் பதியப்பட வேண்டியது அவசியம் ; விண்ணப்பங்களுக்கு -2696594 

Published By: Priyatharshan

04 May, 2016 | 11:34 AM
image

(ப.பன்னீர்செல்வம்) 

வெசாக் தினத்தை முன்னிட்டு கொழும்பு  நகரில் அமைக்கப்படும் அனைத்து தானசாலைகளும் கொழும்பு மாநகர சபையில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. 

இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதற்கு 2696594 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜேமுனி மேலும் தெரிவிக்கையில், 

வெசாக் நோன்மதி  தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் அமைக்கப்படவுள்ள அனைத்து தானசாலைகளும் மாநகர சபையின் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 

இதற்கான விண்ணப்பங்கள் மாநகர சபையால் வழங்கப்படுகிறது அதனை பெற்று முழுமைப்படுத்தி வழங்கினால் உடனடியாக பதிவு செய்யப்படும். அதன் பின்னர் தானசாலைகளில் உணவு, குளிர்பானங்கள்  வழங்கப்படும்போது  சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்படும். இதன் மூலம் உணவுகளின் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்துவதே நோக்கமாகும். 

எனவே கட்டாயம் கொழும்பு மாநகரில் அமைக்கப்படவுள்ள தானசாலைகள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். 

அத்தோடு இனிப்பு குறைந்த உணவுவகைகளையும், குளிர்பானங்களையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு தானசாலைகள் நடத்துவோரிடம் வேண்டுகோளை முன்வைப்பதாகவும் டாக்டர். விஜேமுனி தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47