அமைச்சர் ரவியை பதவி நீக்க வேண்டும் - 'சிறந்த எதிர்­கா­லத்­திற்­கான ஊழ­லற்ற நாடு' அமைப்­பினர் கோரிக்கை 

Published By: Digital Desk 3

03 Jul, 2019 | 03:48 PM
image

(ஆர்.விதுஷா) 

இலங்கை  மின்­சார சபையில்   மின்­வலு , எரி­சக்தி  மற்றும்  தொழில்­துறை   அபி­வி­ருத்தி  அமைச்சர்  ரவி கரு­ணா­நா­யக்­கவை ஜனா­தி­பதி    பதவி நீக்க  நட­வ­டிக்கை  எடுக்க வேண்டும் என்று    'சிறந்த  எதிர்­கா­லத்­திற்­கான  -ஊழ­லற்ற  நாடு ' அமைப்­பினர்  கோரிக்கை  விடுத்­தனர். 

பொதுப்­ப­யன்­பா­டுகள்  ஆணைக்­கு­ழுவை மின்­வலு அமைச்சின்  கீழ்  கொண்டு  வந்து  ஆணைக்­கு­ழுவின்  சுயா­தீ­னத்­தன்­மையை  ஒடுக்கும்  நட­வ­டிக்­கை­களை   அமைச்சர்  ரவி ­க­ரு­ணா­நா­யக்க  முன்­னெ­டுத்­துள்ளார்.இத்­த­கைய  நட­வ­டிக்கைகளை எதிர்க்க  அனை­வரும்  ஒன்­றி­ணைய  வேண்டும்   எனவும் அவர்கள்  வலி­யு­றுத்­தினர்.  மேல்­மா­காண  அழ­கியல்  விடுதி  ( நாடா)  யில்  நேற்று  செவ்­வாய்க்­கி­ழமை  இடம்பெற்ற  ஊட­க­வி­ய­லாளர்  சந்­திப்­பின்­போது    அமைப்பின்  செய­லாளர்  அனில்  ரண­சிங்க  கூறி­ய­தா­வது,  மக்­களின்  நல­னுக்­காக  தெரிவு  செய்­யப்­பட்ட  மக்கள்  பிர­தி­நி­திகள்  தற்­போது  மக்­க­ளுக்கு  பாதிப்பை  ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே  செயற்­ப­டு­கின்­றனர்.  இந்த நிலையில்   மின்­சாரக்  கட்­ட­ணத்தை  தீர்­மா­னித்தல்,  மின்­சார  கொள்­வ­ன­வுக்­கான  அனு­ம­தியை  வழங்கல்  போன்ற   செயற்­பா­டு­களின் போது மக்­களின்  நல­னுக்­காக செயற்­படும் பொதுப்­ப­யன்­பா­டுகள்  ஆணைக்­கு­ழுவை    மின் வலு  அமைச்சின்  கீழ்  கொண்­டு­ வ­ரு­வ­த­னூ­டாக  அந்த  ஆணைக்­கு­ழுவின்  செயற்­பா­டு­களை  ஒடுக்கும்    நட­வ­டிக்­கை­களை  அமைச்சர் கரு­ணா­நா­யக்க  மேற்­கொண்­டுள்ளார். 

அமைச்சர்  கரு­ணா­நா­யக்கா  ஏப்ரல்  மாதத்­திற்கு  பின்னர்  அமைச்­ச­ரவை  பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்­துள்ளார். அதில்   மின்­சாரப் பாவ­னை­யாளர்­க­ளுக்கு  நன்மை பயக்­கக்­கூ­டிய  பல  ஆலோ­ச­னைகள் உள்­ள­டங்­கி­யுள்­ளன.  அதற்கு  அமைச்­ச­ரவை  அனு­ம­தியும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.  இருப்­பினும்  அவற்றை  இதுவரையில்  செயற்­ப­டுத்­து­வ­தற்­கான  எத்­த­கைய  நட­வ­டிக்­கை­க­ளையும்  மேற்­கொள்­ள­வில்லை.  அந்த  ஆலோ­ச­னை­களில்  ஒன்­றாக  சூரிய  மற்றும் காற்று  சக்­தியின்  ஊடாக மின்­சா­ரத்தை  பெறும்  ஆலோ­ச­னையும்    உள்­ள­டங்­கு­கின்­றது. இலங்கை  மின்­சார  சட்­டத்­திற்கு  அமைய  ஒப்­பந்த  முறை­யி­னூ­டா­கவே  மின்­சார  கொள்­வ­ன­வு­களை  மேற்­கொள்ள  முடியும். அதற்­கான  அனு­ம­தியை  வழங்கும்  ஆணைக்­கு­ழு­வாக  பொதுப்­ப­யன்­பா­டுகள்  ஆணைக்­குழு  காணப்­ப­டு­கின்­றது. மாறாக  இந்த  ஒப்­பந்­த ­மு­றை­மையை  பின்­பற்­றாமல்  அமைச்சர்  தன்­னிச்­சை­யான  முறையில் செயற்­ப­டு­கின்­ற­மை­யினால்  மின்­சார  பாவ­னை­யா­ளர்கள்  பிரச்­சி­னைக்கு  முகங்­கொ­டுக்க  வேண்­டிய  நிலை  ஏற்­பட்­டுள்­ளது.   வரு­டத்­திற்கு  20 ஆயிரம்  கோடி  ரூபா­விற்கும்  அதிக பெறு­ம­தி­யான  ஒப்­பந்­தங்கள்  இடம்பெறும்  மின்­சார  கொள்­வ­ன­விற்­கான  அதி­கா­ரத்தை அமைச்சர்  ரவி கரு­ணா­நா­யக்­க­விடம்  ஒப்­ப­டைத்தால்   இலங்கை  மத்­திய வங்­கியில்  இடம்பெற்ற  மோசடி போன்று   மின்சாரசபையிலும்   ஏற்படும்.  இத்தகைய நிலையில்  மின்சாரக்கட்டணத்தை  அலகொன்றுக்கு  7 ரூபாவினால்   அதிகரிக்க  வேண்டிய  நிலை  ஏற்படுவதுடன், மின்சார  பாவனையாளர்கள்  பாரிய  நெருக்கடியை  சந்திக்க  நேரிடும். ஆகவே  அதற்கு  எதிரான  நடவடிக்கைகளை  முன்னெடுக்க  அனைவரும் ஒன்றிணைய  வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33