நாட்டை சீர்குலைப்பதற்கான ஞானசாரரின் அழைப்பே 7ஆம் திகதி ஆர்ப்பாட்டம்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

Published By: J.G.Stephan

03 Jul, 2019 | 01:14 PM
image

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் எதிர்வரும் ஏழாம் திகதி இந்நாட்டை  சீர்குலைப்பதற்கும் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். இதனை உடனடியாக தடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இத் தனி மனிதன் நாட்டையும் சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும்  என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

30ஆம் திகதி இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது அமைச்சர்களும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும், கடந்த மூன்றாம் திகதி இராஜினாமா செய்தபோது இந்த அரசுக்கு பல நிபந்தனைகளை விதித்தோம்.  

முஸ்லிம் மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்துவது, மத்ரஸாக்களை பாதுகாப்பது, கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது மற்றும் முஸ் லிம் பெண்களின் ஆடை களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல் ஆகியவற்றை வலி யுறுத்தியுள்ளோம். 

முஸ்லிம் அரசியல் தலை வர்கள் அன்று இராஜினாமா செய்யாவிட்டால் இந்நாட்டில் பாரிய இனக்கலவரம் ஏற்பட்டி ருக்கும்.

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் ஞானசார தேரரின் ஊர்வலம் தடுக்கப்படல் வேண்டும். இவை தொடர்பாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும்,பாதுகாப்பு அமைச்சருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும்,இவ்விடயம் தொடர்பாக மகஜர் கையளிக்க உள்ளோம்.இவ்விடயத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பி னர்களும் தீவிரமாக இருக்கின்றோம். இந்நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டும்.

எமது முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை விமல் வீரவன்ச, எஸ்.பி.திஸாநாயக்க, மகிந்தானந்த அலுத்கமகே, அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் ஞானசார தேரரும் படுமோசமான வார்த்தை பிரயோகங்களையும் முஸ்லிம் மக்களை இழிவுபடுத்தியும் வருகின்றார்கள்.

முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதோடு,எமது முஸ்லிம் பெண்களின் ஆடை விடயம் இன்று சட்ட ரீதியாக அணியலாம் என்றொரு நிலைக்கு வந்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17