மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தை சுவீ­க­ரிக்கும் யோசனை தவ­றா­னது - ரணில் 

Published By: Digital Desk 3

03 Jul, 2019 | 01:01 PM
image

(நமது நிருபர்)

மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழகத்தை சுவீ­க­ரிக்கும் யோச­னைக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்ப்பு  தெரி­வித்­துள்­ள­துடன் அதனை   தனியார்  பல்­க­லைக்­க­ழ­க­மா­கவே   இயங்­க­வைத்து   மூவின மாண­வர்­க­ளையும் கல்வி கற்­ப­தற்கு அனு­ம­திக்­கு­ம் வகையில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்  ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று பிற்­பகல் நடை­பெற்­றது. இதன்­போது   மட்­டக்­க­ளப்பு  தனியார்  பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில்   பாரா­ளு­மன்ற   மேற்­பார்வை  குழு சமர்ப்­பித்த   பிரே­ரணை  தொடர்பில்  கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.  பேரா­சி­ரியர் ஆசு மார­சிங்க தலை­மை­யி­லான பாரா­ளு­மன்ற  கல்­விசார் மேற்­பார்­வைக்­குழு  மட்­டக்­க­ளப்பு தனியார் பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில்    நேர­டி­யாக கள­வி­ஜயம் செய்து  நிலை­மை­களை   ஆராய்ந்­த­துடன்   பரிந்­து­ரைகள் உள்­ள­டக்­கிய அறிக்­கையை   அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பித்­தி­ருந்­தது.  

இந்த அறிக்­கையில்   மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தை    அர­சாங்கம்  சுவீ­க­ரித்து   பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் கீழ்  நிர்­வ­கிக்க  வேண்டும் என்று   பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த விடயம் தொடர்பில்  நேற்று  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்  கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.   இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தை  அர­சாங்கம்  கைய­கப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து  அமைச்­சர்கள் சிலர்  வலி­யு­றுத்­தினர்.  

இதன்­போது கருத்து தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  இந்த பல்­க­லைக்­க­ழ­க­மா­னது  வெளி­நாட்டு முத­லீட்டில்  அமைக்­கப்­பட்­டுள்­ளது இதனை அர­சாங்கம் சுவீ­க­ரிக்­கு­மானால்  வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தவ­றான செய்தி   வழங்­கப்­படும்.   இதன் மூலம்  வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளுக்கு பாத­க­மான நிலைமை ஏற்­ப­டலாம் என்று  கூறி­யுள்ளார். 

இத­னை­ய­டுத்து கருத்த  தெரி­வித்த அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க   வெளி­நாட்டு முத­லீ­டுகள்   என்றால்   அது குறித்து சிந்­திக்க முடியும்  ஆனால் இந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கான முத­லீடு என்­பது அர­சியல் ரீதி­யி­லான முத­லீ­டா­கவே காணப்­ப­டு­கின்­றது. எனவே இதனைக் கைய­கப்­ப­டுத்தி பல்­க­லைக்­க­ழக  மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். இதன் மூல­மா­கவே  அனைத்து இன மக்­க­ளையும் திருப்­தி­ப­டுத்த முடியும்   என்று  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

 ஆனாலும் இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தை தனியார் கல்வி நிறு­வ­ன­மா­கவே வைத்­துக்­கொண்டு   அனைத்து இன  மாண­வர்­க­ளையும்  அங்கு  பயிலும் வகை­யிலும்   நட­வ­டிக்­கை­களை  எடுப்­பதே   சிறந்தது என்று   பிரதமர்  கூறியுள்ளார். 

ஆனாலும் தனியார் பல்கலைக்கழகமாக வைத்துக்கொண்டு எவ்வாறு   அனைத்து மாணவர்களையும் இங்கு   கல்வி கற்பிக்க முடியும் என்று  அமைச்சர்கள் சிலர் இதன்போது விசனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இவ்விடயம் தொடர்பிலும் இறுதித் தீர்மானம்  நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12