ஹேமசிறி, பூஜித்தவுக்கு நாளை வரை விளக்கமறியல்!

Published By: Vishnu

02 Jul, 2019 | 09:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை  தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு இவர்கள் இருவரிடும் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக பெற இன்று காலை 10 மணிக்குசி.ஐ.டி தலை­மை­ய­கத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்தனர்.

எனினும் இவர்கள் சமூ­க­ம­ளிக்­காமல் சுக­யீனம் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். 

ஹேம­சிறி பெர்­னாண்டோ இரு­தய கோளாறு கார­ண­மாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் இரு­தய சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், காய்ச்­ச­லுடன் கூடிய திடீர் சுக­யீனம் கார­ண­மாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர  நார­ஹேன்­பிட்­டியில் உள்ள பொலிஸ் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.  

அந்­தந்த வைத்­தி­ய­சா­லை­களில் அவர்­க­ளுக்கு  சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே, இன்று பிற்­பகல்  வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சென்ற சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் மேற்­பார்­வையின் கீழான இரு சிறப்புக் குழுக்கள் அவர்­க­ளிடம் வாக்கு மூலம்  பதிவுச் செய்­து­கொண்ட பின்னர், அவர்­களைக் கைது செய்­தனர்.  

இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட இரு­வரும், சி.ஐ.டி.யினரின் பாது­காப்பின் கீழ்  வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே தொடர்ந்து  சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்த கைதுகள் குறித்து சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ்  அத்­தி­யட்சர்  ஒரு­வரின் கீழான அதி­கா­ரிகள், கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு மாலை அறிக்கை சமர்ப்­பித்த நிலையில்,  மாலை வேளையில்  கொழும்பு பிர­தான நீதிவான் லங்க ஜய­ரத்ன கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கும், நார­ஹேன்­பிட்டி பொலிஸ் வைத்­தி­ய­சா­லைக்கும் சென்று சந்­தேக நபர்­களைப் பார்­வை­யிட்டதுடன் நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19