குளவி கொட்டுக்குள்ளான 9 மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

02 Jul, 2019 | 07:52 PM
image

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராசா வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் பாடசாலை விட்டு மாணவர்கள் வெளியே சென்ற போது குளவி கொட்டியதில் ஒன்பது மாணவர்கள், காவலாளி உட்பட பத்துப் பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராசா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இன்று பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை விட்டு வெளியேறியபோது பாடசாலையிலிருந்து 300மீற்றர் தொலைவிலுள்ள தனியார் காணியிலிருந்த வேம்பு மரத்திலிருந்து கலைந்த குளவிக்கூடு 7  மாணவிகளையும் இரண்டு  மாணவர்கள் மீதும் கொட்டியது.

இச்சம்பவத்தை பார்வையிடச் சென்ற பதுகாப்பு காவலாளி உட்பட பத்துப்பேர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இன்று பிற்பகல் சிதம்பரபுரம் வைத்தியசாலையிலிருந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விடயம் குறித்து கல்வி வலயப்பணிப்பாளருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும்  தற்போது அப்பகுதி இயல்பு நிலைக்குத்திரும்பியுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் இ.தமிழகன் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27