கூட்டமைப்பின் ஐக்கியத்தை சீர்குலைப்பது யார்? கூறுகிறார் சுரேஷ்

Published By: MD.Lucias

04 May, 2016 | 09:49 AM
image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தை சீர்குலைப்பது யார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், 

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக்கட்சி நடத்திய மேதினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதம பேச்சாள ராகக் கலந்துகொண்டார். அவருடைய உரையில் அவர் வலியுறுத்திய ஓரிரு விடயங்களில் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையாகச் செயற்படுமாக இருந்தால் 2017ஆம் ஆண்டு புதியதோர் சூழலில் மேதினத்தைக் கொண்டாட முடியும் என்று கூறியுள்ளார். மேதினத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்பொழுது அவர் கூட்டமைப்பின் கூட்டத்தைக் கூட்டுவதற்கோ அல்லது கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திப்பதற்கோ முயற்சிக்கவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களைச் சந்தித்ததுடன், பொது நிகழ்வுகளிலும் பங்குபற்றி திரும்பியுள்ளார். அப்பொழுதும் கூட அவர், குழம்பிய குட்டையில் யாரும் மீன்பிடிக்கக்கூடாது எல்லோரும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என்ற கருத்தையும் கூறியிருந்தார். எந்த குட்டை குழம்பியிருக்கிறது என்பதையும் எவ்வாறு குழம்பியிருக்கிறது என்பதையும் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

இப்பொழுது இரண்டாவது முறையாக மேதின நிகழ்விற்கு வந்தபோதும் கூட, கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கான எந்த நிகழ்ச்சி நிரலும் அவரிடம் இல்லை. அதன் காரணமாகவே கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த பலர் கிளிநொச்சியில் கூட்டுறவு சங்கத்தினர் நடத்திய மேதின நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட தமிழரசுக் கட்சி கிளை மார்ட்டின் வீதியிலிருக்கும் தமது கட்சி காரியாலயத்தில் கூடி, தமிழரசுக் கட்சி மருதனார்மடத்தில் மேதினத்தைக் கொண்டாடுவது என்ற முடிவை எடுத்திருந்தது. அவ்வாறான கூட்டத்திற்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களோ அல்லது கட்சிகளின் பிரதிநிதிகளோ அழைக்கப்படவில்லை. எனவே, கூட்டமைப்பாக மேதினத்தை அனுட்டிக்கக்கூடாது என்பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியே உறுதியாகச் செயற்பட்டது. தனிவழிபோகின்ற முடிவை தமிழரசுக் கட்சி எடுத்துவிட்டு கூட்டமைப்பு ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகப் புலம்புவது அநாகரிகமாகத் தென்படுகிறது. இவ்வாறாகப் புலம்புவதனூடாக மக்களை ஏமாற்றி தாம் ஐக்கியத்திற்காகச் செயற்படுகிறோம் என்ற ஒரு பொய்யான முகபாவத்தைக் காட்ட முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது.

அதுமட்டுமன்றி, எல்லாமே கூடிவருவது போன்றும், யாரும் அதனைச் சிதைத்துவிடக்கூடாது என்றும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றார். ஒருபுறத்தில் அவ்வாறு கூறும் அவர், இவையெல்லாம் எனது கணிப்பீடு மாத்திரமே என்றும் கூறுகின்றார். சம்பந்தனிடம் ஒரேயொரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். முந்தைய அரசாங்கம் பல்வேறு தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. காணிகளைக் கபளீகரம் செய்தது. சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்தது. இராணுவத்தினூடாக பௌத்த விகாரைகளை அமைத்தது. மக்களை மீளக் குடியேறவிடாமல் தடுத்தது. இவ்வாறு பல நடவடிக்கைகளை மேற்கொண்டதை நாமனைவரும் அறிவோம். இப்பொழுது சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கக்கூடிய தமிழ் மக்களின் ஆதர வுடன் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியும், புதிய அரசாங் கமும் முன்னைய ஆட்சிமுறையிலிருந்து எவ்வாறு மாறுபட் டிருக்கின்றது? தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் புதிய பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன. 

0புதிய இராணுவக் குடியிருப்புக்களும் சிங்களக் குடியிருப்புக்களும் உருவாக்கப்படுகின்றன. இவற்றிற்கெதிராக காணி உரிமையாளர்களும் தமிழ் மக்களுமே தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் இருக்கக்கூடிய ஒருவர், ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும்வரை இவற்றை தற்காலிகமாகவேனும் ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது?

பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மூலம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. மாறாக, அரசாங்கத்துடன் தமிழர் தரப்பாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மையுடன் ஈடுபட வேண்டும். குறைந்தபட்சம் நிரந் தரத் தீர்வு எட்டும்வரை இவை தற்காலிகமாகவேனும் நிறுத்

தப்படவேண்டும். இவை எதுவுமே இல்லாமல் காலம் கனிந்திருக்கிறது என்பதும், எல்லாமே கைகூடி வருகிறது என்பதும் எவ்வளவு தூரம் நம்பிக்கை தரக்கூடிய கருத்துக்

கள்? ஒருபுறத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்ப தாகக் கருத்துக்களைக் கூறும் சம்பந்தன் மறுபுறத்தில் அரசாங் கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடர்பாக அதனை நிறுத்துவதற்கு எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்? என்பதை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவர் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வந்தவேளை, அவர்களை அவமதித்து அவர்களது முறைப்பாடுகளைச் சரியாகச் செவிமடுக்காமல், சிறைச்சாலை திறப்பு எனது இடுப்பில் இல்லை என்றும் நான் பார்க்கின்றேன் நீங்கள் போய்வாருங்கள் என்றும் அவர் கூறிய கூற்றானது சிறையில் வாடும் அவ்வளவு உறவுகளையும் அவர்களது உறவினர்களையும் அவமதிப்பதற்குச் சமமாகும். இது சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற அபிப்பிராயத்தையும் கையாலாகாத்தனத்தையுமே காட்டுகின்றது.

இவ்வாறுதான் கைதுகள் நடைபெறமாட்டாது என்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கூறிய இரண்டு தினங்களுக்குள் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று மட்டக்களப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே கடந்த ஆட்சியின் அத்தனை நிகழ்ச்சிநிரலும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தமிழ் மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் மக்கள் ஒற்றுமையாகத்தான் வாக்களித்தார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் கூட்டுத்தீர்மானங்கள் ஆகியவற்றை எடுப்பதென்பதைத் தவிர்த்து, தமிழரசுக் கட்சி தனிவழி செல்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சீர்குலைக்கிறது. அதன் வெளிப்பாடே மருதனார் மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி மட்டும் தனியான மேதினத்தை நடத்தியது. ஐக்கியத்தை குழப்புவதன் காரணமாகவே ஐக்கியத்தைப் பற்றி தமிழரசுக் கட்சி அதிகம் புலம்புகிறது. ஐக்கியத்தைப் பற்றிப் பேசுபவர்களே ஐக்கியத்தைக் குழப்புகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13