ஜனாதிபதிக்கு அனுப்பிய நீதிமன்ற கடிதம் தொடர்பில் பதில் இல்லை - தயாசிறி 

Published By: Vishnu

02 Jul, 2019 | 03:13 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்றத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதாகத் தெரிவித்து நீதிமன்றத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்திற்கு சபாநாயகரிடம் பதில் கோரப்பட்டுள்ள போதிலும் அவர் அதனைக் கவனத்திற் கொள்ளவில்லை. சபாநாயகரும் அரசியல் செய்ய முற்படுகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார். 

அண்மையில் குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபடுத்தியே என்னை தெரிவுக்குழுவுக்கு அழைக்கின்றனர். ஆனால் தெரிவுக்குழுவில் சென்று சாட்சியமளிக்க வேண்டிய அவசியமில்லை இல்லை. காரணம் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றமைக்கு ஏற்ப நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதனாலேயே தெரிவுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளேன். 

தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு மறுப்பு தெரிவித்தமையால் நீதிமன்றத்தை நாட வேண்டிய வரும் என்றும் பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவ்வாறு என் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் அவர்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08