பாரி­ச­வா­தத்தால் பாதிக்­கப்­பட்டு உயிர் காப்பு உப­க­ர­ணங்­களின் தய­வுடன் வாழ்­நாளை எண்ணிக் கொண்­டி­ருக்கும் 4 மாத குழந்­தையை விட்டு இரு வளர்ப்பு நாயொன்று நகர மறுத்த மனதை நெகிழ வைக்கும் சம்­பவம் அமெ­ரிக்க மின்­னே­ஸோரா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

நோரா ஹோல் என்ற மேற்­படி குழந்­தைக்கு பாரிசவாத பாதிப்பால் மூளையும் நரம்பு மண்­ட­லமும் பாதிக்­கப்­பட்ட நிலையில் அவர் உயிர் பிழைக்க வாய்ப்­பில்லை என மருத்­து­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் அந்தக் குழந்­தைக்­கான உயிர் காப்பு உப­க­ர­ணங்­களின் செயற்­பாட்டை நிறுத்தி அந்தக் குழந்­தையை அமை­தி­யாக மர­ணத்தை தழுவச் செய்­வ­தற்கு அனு­ம­திக்க அதன் பெற்­றோர்­க­ளான ஜோனும் மேரியும் தீர்­மா­னித்­தனர்.

இதனையடுத்து அந்தக் குழந்தை அதற்கு மிகவும் பிடித்­த­மான இரு வளர்ப்பு நாய்­களை அதன் இறுதித் தரு­ணத்தில் காண்­பிக்க அவர்கள் மருத்­து­வ­மனை நிர்­வா­கத்தின் அனு­ம­தியைக் கோரினர்.

அவர்­க­ளுக்கு மருத்­து­வ­மனை நிர்­வாகம் அனு­ம­தி­ய­ளிக்­கவும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரு வளர்ப்பு நாய்­களும் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வரப்­பட்­டன.

இதன்­போது அந்த இரு நாய்­களில் ஒன்று அந்தக் குழந்தையை விட்டு பிடிவாதமாக நகர மறுத்து அங்கிருந்த அனைவரது இருதயத்தையும் நெகிழ வைத்துள்ளது.