தனி­யொரு நட்­சத்­தி­ரத்தை வலம் வரும் பூமியின் அள­வை­யொத்த 3 புதிய கோள்­களை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

அந்தக் கோள்கள் தமது தாய் நட்­சத்­தி­ர­மான 2மாஸ் ஜே23062928 – -0502285 என்ற நட்­சத்­தி­ரத்தை வலம் வரு­கின்­றன.

அவை அந்த நட்­சத்­தி­ரத்­தி­லி­ருந்து உயிர் வாழ்க்­கைக்கு சாத்­தி­ய­மான ஒளியை பெற்று வரு­வ­தாக நம்­பு­வ­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அத்துடன் அந்தக் கோள்­களில் ஒன்று பூமி­யி­லுள்­ள­தை­யொத்த தட்ப வெப்ப நிலையைக் கொண்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

திரெப்பிஸ்ட் – -1 என்ற பிறி­தொரு பெய­ராலும் அழைக்­கப்­படும் இந்த நட்­சத்­திரம் எமது சூரி­ய­னிலும் 8 இல் ஒரு மடங்கு அள­வு­டை­ய­தாகும். . அந்த நட்­சத்­தி­ரம்­ அக்­கு­வாறிஸ் நட்­சத்­திரத் தொகு­தியில் அமைந்­துள்­ளது.

பூமி­யி­லி­ருந்து சுமார் 40 ஒ ளியாண்­டுகள் தொலை­வி­லுள்ள இந்தப் புதிய கோள்களை பெல்ஜியம் லீஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.