ஹம்பாந்தோட்டை  மாவட்ட வைத்தியசாலையை மக்களின் பாவனைக்கு கையளித்த ஜனாதிபதி

Published By: Digital Desk 4

01 Jul, 2019 | 10:08 PM
image

நாட்டில் நோயற்ற ஆரோக்கியமான மக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

ஹம்பாந்தோட்டை புதிய மாவட்ட மருத்துவமனையை ஜனாதிபதி மக்களின் பாவனைக்கு கையளிப்பு

இதனால் சுகாதாரத்துறையின் எதிர்கால செயற்திட்டங்களில் நோய்த்தடுப்பு மற்றும் நோய் நிவாரண துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார். 

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட புதிய மாவட்ட வைத்தியசாலையை மக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் இன்று (01) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி அன்பளிப்பில் 7000 மில்லியன் ரூபா செலவில் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, 850 படுக்கைகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை நவீன வைத்திய உபகரணங்களை கொண்ட சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுஇ மருத்துவ கூடம், இரத்த சுத்திகரிப்பு நிலையம்? வதை்தியர்களுக்கும் தாதியர்களுக்குமான புதிய உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதி போன்ற வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையுடன் இணைந்ததாக சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், 2020ஆம் ஆண்டளவில் அதன் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது ஆரம்பிக்கப்பட்டது. 

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தியசாலையை மக்களின் பாவனைக்காக கையளித்த ஜனாதிபதி  அதனை பார்வையிட்டார். இம் வைத்தியசாலையிலுள்ள விசேட CI scanner இயந்திரத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார். 

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன். சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, ஹம்பாந்தோட்டை மாவட்ட  செயலாளர் பந்துல ஹரிச்சந்ர ஆகியோரும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Jonne Doornewaard மற்றும் இந்திய கொன்சியுலர் நாயகம் பிரேம்குமார் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49