அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக வைத்தியர்கள் கருப்பு பட்டி போராட்டம்!  

Published By: Vishnu

01 Jul, 2019 | 05:53 PM
image

(ஆர்.விதுஷா)

களுத்துறை வைத்தியசாலையில் கடந்த வாரம் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான மகஜரில்  கையொப்பம் சேகரிக்கும்  நடவடிக்கையில்  ஈடுபட்டபோது பொலிசாரின்  முன்னிலையில் தாக்குதல்  நடத்தப்பட்டதாகவும் அது  தொடர்பில் ஆதார  பூர்வமாக முறைப்பாடு செய்துள்ள போதிலும் இது வரையில் தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும்  அரசாங்க வைத்திய அதிகாரிகள்  சங்கம்  குற்றஞ்சாட்டியுள்ளது. 

 

இதேவேளை, இந்த  தாக்குதலை அமைச்சர்  ராஜிதசேனாரத்னவின்  ஆதரவாளர்களே  மேற்கொண்டுள்ளனர் ஆகவே , இந்த சம்பவங்களுக்கு அவரேபொறுப்பு கூற வேண்டும். அமைச்சரின் இத்தகைய  ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும்  அடக்கு  முறைகளை  கண்டித்து  அனைத்து வைத்தியசாலைகளின்  வைத்தியர்களும் கருப்புப்பட்டி  அணிந்து  சேவையில்  ஈடுபட்டு வருகின்றனர்.     

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில்  இன்று இடம் பெற்ற  ஊடக  சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.

கருப்பு பட்டி போராட்டமானது இன்றைய  தினம்  ஆரம்பமாகியுள்ள நிலையில் நீர்கொழும்பு, சிலாபம் மற்றும் குருணாகல்  ஆகிய பகுதிகளின்  வைத்தியர்கள் இவ்வாறாக  கருப்பு  பட்டி  அணிந்து  சேவையில்  ஈடுபட்டனர்.  

அதே போல்  குறிப்பிட்டப்பட்ட  ஒரு தினத்தில்  நாடு பூராகவும்  உள்ள  அனைத்து வைத்தியர்களும்   இவ்வாறாக  கருப்பு  பட்டி  அணிந்து எதிர்ப்பு  நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19