ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கிய தீர்மானம் 9ஆம் திகதி என்கிறார் வாசுதேவ..!

Published By: J.G.Stephan

01 Jul, 2019 | 03:47 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதி கட்சி தலைகர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றபோதும் அதுதாெடர்பில் பொதுஜன பெரமுன எந்தவிதமான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளாமல் வேட்பாளர் தொடர்பில் அறிவிக்காமல் இருப்பது, தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலா இருக்கின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஏனெனில் தேர்தல் எதுவும் இடம்பெறக்கூடாது என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசிய கட்சி இருக்கின்றது.

இருந்தபோதும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி என்றவகையில் அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்து இதுதொடர்பாக எமது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தோம். அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சிறிய காலமே இருக்கின்றது. அதனால் சிறந்த வேட்பாளர் ஒருவரின் பெயரை விரைவில் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் இறுதி நேரத்தில் வேறு பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் எமக்கு செய்வதறியத நிலை ஏற்படும் என தெரிவித்தோம்.

எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், எதிர்வரும் 9ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை சந்தித்திது இதுதொடர்பாக ஆராய தீர்மானித்திருக்கிறார். இந்த சந்திப்பில் பெரும்பாலும் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்று கொள்கையளவில் தீர்மானத்துக்கு வரும் சாத்தியம் இருக்கின்றது. 

அதனால் எதிர்வரும் 9ஆம் திகதி கட்சி தலைவர்கள் கூடி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில்  தீர்மானத்துக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், லங்கா சமசமாஜ கட்சி, பிரபா கணேசனின் கட்சி ஆகியன இணைந்து வேட்பாளர் ஒருவரை தீர்மானிக்க இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27