பாராளுமன்ற  மோதல்:  சீ.சீ.ரி.வி. காணொளி உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்டோர் இனங்காணப்படுவர் : தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அரசாங்கம்   

Published By: MD.Lucias

04 May, 2016 | 09:10 AM
image

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற மோதல் சம்ப­வத்­துடன் தொடர்­பு­டைய மக்கள் பிர­தி­நி­தி­களை சீ.சீ.ரி.வி.யின் உத­வி­யுடன் அடை­யாளம் கண்டு அவர்­க­ளுக்கு எதி­ரான முறை­யான நட­வ­டிக்­கையை எடுப்­ப­தற்கு கட்­சித் ­த­லை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­க­ப்பட்­டுள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க பிரதி சபா­நா­யகர் தலை­மையில் நிறு­வப்­பட்­டுள்ள குழு நேற்று முதல் விஷேட பரிசோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் முதல் முறை­யாக இவ்­வாறு வருந்தத்தக்க செயல் ஒன்று இடம்­பெற்­றதை வண்­மை­யாக கண்­டிக்­கின்றோம். இது ஜன­நா­ய­கத்தை கடு­மை­யாக பாதிக்கும் செயற்­பாடாகும். எனவே இது போன்ற செயற்­பா­டுகள் இனி­மேலும் இடம்­பெ­றா­தி­ருக்க சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியமாகும்.

பாரா­ளு­மன்­றத்தில் அமைச்சர் சந்தித் சம­ர­சிங்க தாக்­கப்­பட்டார். அமைச்சர் சரத் பொன்­சேகா பேசிக்­கொண்­டி­ருந்த வேளை ஏற்­பட்ட குழப்ப நிலையின் போதே அவர் இவ்­வாறு கடு­மை­யாக தாக்­கப்­பட்­டுள்ளார்.இவர் சபையினுள் வைத்து தாக்­கப்பட்­ட­மை­க்கான சீ.சீ.ரி.வி. காணொளி ஆதா­ரங்கள் உள்­ளன.

எனவே சபா­நா­யகர் தலை­மையில் நேற்று இடம்­பெற்ற கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போதும் கட்சி தலை­வ­ர­்கள் அனை­வரும் சீ.சீ.ரி.வீ. ஆதா­ரங்­களை கொண்டு இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான செயற்­பா­டு­களை மன்­றினுல் முன்­னெ­டுப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்­பிட்­டனர்.

இன்று பாரா­ளு­மன்­ற­தத்தில் மக்கள் பிர­தி­நிதி தாக்­கப்­பட்ட போது சபையை பார்­வை­யிட வந்­தி­ருந்த பாட­சாலை மாண­வர்­கள சிலரும் கலந்­துக்­கொண்­டி­ருந்­தனர். அவர்­க­ளுக்கும் தனது பெற்­றோர்கள் தெரிவு செய்த அர­சியல் தலை­வர்­களின் செயற்­பாடு­களை நேரில் காண சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

பாரா­ளு­மன்றம் போன்ற உய­ரிய சபையில் எவ்­வாறு நடந்­து்­கொள்ள வேண்டும் என்­பது தொடர்­பி­லான கோவை ஒன்றும் மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு அச்­சிட்டு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதன் பின்­னரும் இவ்­வா­றான நிந்­த­னை­யான செயற்­பா­டு­களில் இவர்கள் ஈடு­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது.

எமது நாட்டு பாரா­ளு­மன்­றத்தில் இது போன்­ற­தொரு சம்­பவம் இடம்­பெற்றால் அதற்கு முன்­னெ­டுக்க வேண்­டிய சட்­ட­திட்­டங்கள் தொடர்­பி­லான

ஆவ­ண­ங­்­களும் உள்­ளன. சட்­டங்­களும் நடை­மு­றையில் உள்­ளன. அவற்றை பயன்­ப­டுத்­தாமல் இருப்­ப­தா­லேயே இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெற கார­ண­மா­கின்­றன.

நேற்று இடம்­பெற்ற எமது நாட்டின் உய­ரிய சபையை நிந்­தனை செய்யும் வகை­யி­லான செயற்­பாட்­டிற்கு உயர்­நீ­தி­மன்றம் வரையில் செல்­வ­தற்­கான சட்­டத்­திட்­டங்கள் உள்­ளன. அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்தி வெகு­வி­ரைவில் இந்தச் செயற்­பா­டுகள் இனி ஒரு­போதும் இடம்­பெ­றா­தி­ருக்கும் வண்ணம் முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும்.

பாரா­ளு­மன்ற சிறப்புரிமை சட்­டங்­களின் அடிப்­ப­டையில் சட்­ட­ந­ட­வ­டிக்­கை­களை எடுக்க முடியும். எனவே இன்று இடம்­பெ­ற­வுள்ள அமர்வின் போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பிரதி சபா­நா­யகர் திலங்க சுமா­தி­பால தலை­மை­யி­லான குழு வழங்கும் அறிக்­கையின் பிர­காரம் சட்ட ரீதியில் நட­வ­டிக்கை எடுக்கப்படும் என்று எதிர்­பார்க்­கின்றோம். அவ­ருக்கு அதற்­கான அதி­கா­ரங்­களும் உள்­ளன என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக உரையாற்றுகையில்

இலங்கை வர­லாற்றில் முதன் முறை­யாக பாரா­ளு­மன்­றத்தில் இரத்தம் சிந்தும் வகை­யி­லான சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன பேச முற்­பட்ட போது சபா­நா­யகர் அவரை தான் அனு­மதி வழங்கும் போது பேசு­மாறு பணித்தார். எனினும் அதனை கவ­னத்தில் கொள்­ளாது அவர் பேச முற்­பட்ட போதே பிரச்­சினை எழுந்­தது.

கடந்த மேதின கூட்­டத்­தின்­போது கொழும்­பிலும் காலி­யிலும் மலை­ய­கத்­திலும் திரண்டு வந்த அர­சாங்கத்தின் ஆத­ரா­வா­ளர்­களை கண்டு அஞ்­சிய கிரு­ளப்னை கூட்­டமே இவ்­வா­றான குழப்ப நிலையை பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­பட்­டுத்த முற்­பட்­டது.

அவர்­களை எதிர்த்து பேசு­ப­வர்­களின் கருத்­துக்­களை அவர்­களால் பொறுத்­துக்­கொள்ள முடி­யாததனால் சபையில் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பேச்சு இடம்பெற்ற போது குழப்பத்தை ஏற்படுத்தினர்.இது நிந்தனைக்குரிய செயல் என்றே கருதுகின்றோம்.

சபாநாயகர் நீதியான முறையில் தீர்வை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது எனவே தவறு செய்தவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதி சபாநாயகர் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு சுகம் வேண்டி பிரார்திக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08