பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் சம்பள கொடுப்பனவையும் பெற்றுக் கொடுப்பேன் ; வடிவேல் சுரேஸ்

Published By: Digital Desk 4

01 Jul, 2019 | 10:53 AM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை  பெற்றுக் கொடுத்து போல் 50 ரூபாய் சம்பள கொடுப்பனவையும்  எனது அமைச்சின் ஊடாக பெற்றுக் கொடுக்க துரித நடவடிக்கை எடுப்பேன் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த வாரத்திற்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் சம்பள கொடுப்பனவு தொடர்பான தீர்மானம் எட்டபடும். இதற்கான துரித நடிவடிக்கைகள் என்னால் முன்னெடுக்கப்படும். இந்த கொடுப்பனவு எனது அமைச்சின் இலங்கை தேயிலை சபையின் ஊடாகவே வழங்கபடவுள்ளது. 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வெளிநாடு சென்று தற்போது நாடு திரும்பி உள்ளார். இனி இது  தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடவடிக்கைகளும் முன்னனெடுக்கபடும். நான் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்தேனோ அதேபோல் இதனையும் எனது அமைச்சின் ஊடாக பெற்றுக் கொடுப்பேன் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

பதுளை மாவட்டம் ஹாலிஎல ஊவஐலண்ஸ் தோட்டம் பாடசாலை வீதி  பண்முகப்டுத்தபட்ட நிதி மூலம் செப்பணிடப்பட்டு மக்களிடம் கையளிக்கும்  நிகழ்விற்கு நேற்று அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு  தெரிவித்தார். 

இதன் போது தோட்ட ஆலய புணரமைப்பிற்கான  நிதி ஒதுக்கீட்டு கடிதமும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்;

பட்ஜெட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளத்தில் அதிகரிக்கப்பட்;ட 50 ரூபா சம்பள அதிகரிப்பை மேற்க்கொள்ள வேண்டும் என மலையகத்தின் ஏனைய தலைமைகள் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இந்த கொடுப்பனவு வழங்கபடவுள்ளது. 

இந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த போதும் எனது அமைச்சின் கீழ் இயங்கும் தேயிலை சபையின் ஊடாகவே வழங்கப்படும். அதனால் இந்த கொடுப்பனவை வழங்க என்னால் ஆன அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்

ஆரம்பத்தில் இந்த விடயம் தொடர்பில் பாரிய அழுத்தங்கள் அனைவராலும் கொடுப்பட்டாலும் அதுவும் பின்னடைவை நோக்கியே செல்கின்றது. காரணம் காரணமாவர்களின் அமுத்தங்களின் பின்னடைவு. எது எவ்வாறாயினும்  இந்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை காலப்பகுதிக்கு நிலுவையுடன் வழங்கப்படும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த சில காலங்களில் பல போராட்டங்கள் 27 கட்ட சுற்று பேச்சுவார்ததைகள் நடைபெற்றன. இதில் அனைத்து மக்களும் பிரதேச வேறுபாடுகள் இன்றி  போராட்டங்களை நடத்தியதோடு இளைஞர்கள் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது.  

இதில் அனைவரினது கோரிக்கையும் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பாக இருந்தது. எனது கோரிக்கையும் அதுவாகவே இருந்தது. இருந்தும் இதற்கு கம்பனிகள் ஒத்துவராததினால் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தொகையில் தொழிலாளர்களுக்கு நன்மை பகைக்க கூடிய விதத்தில் 700.00 ரூபாய் அடிப்படை சம்பளமும் 50.00 ரூபாய் விலைக் கொடுப்பனவும் மேலதிக இறாத்தலுக்கு தேயிலை 40.00 இறப்பர் 45.00 ரூபாவும்; கட்டாயம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கைசாத்து இடப்பட்டது. 

இது போதாது மேலும் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் என்ற மலையக தலைவர்களின் வேண்டுகோலுக்கு அமைய நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் பட்ஜெட் மூலம்  நிதி அமைச்சின் ஊடாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கபட்டது. 

இருந்தும் இந்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் வழங்கபட வேண்டிய நிலையில் அவை இன்னும் வழங்கப்படவில்லை.;. இதனை வழங்க மலையக ஏனைய தலைமைகளும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும், தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இன்னும் ஒரு சரியான  முடிவு வராமல் இருப்பது வேதனைக்குறியது. இதனை முடித்து கொடுக்க வேண்டிய பொருப்பு நம் அனைவருக்கும் உள்ளது அதனையே நானும் முன்னெடுக்கின்றேன் என்று கூறினார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45