தற்கொலை செய்துகொள்ள முயன்ற ஆண் ஒருவரின் உயிரை பேஸ்புக் குழு ஒன்று காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆண்களுக்கு மன ரீதியாக உதவி செய்வதற்காக தொடங்கப்பட்ட பேஸ்புக் குழு ஒன்று தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக கூறியுள்ளது.
'மேன் சட் அபர்தீன்' (Man Chat Aberdeen) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த குழுவை தனக்கு தற்கொலை எண்ணங்கள் உள்ளதாகக் கூறி இரண்டு குழந்தைகளின் தந்தையான ஓர் ஆண் அணுகியுள்ளார்.
அதற்கு சில மணி நேரங்கள் முன்னர்தான் அந்தக் குழுவை ஸ்கொட்லாந்து நகைச்சுவையாளர் ரே தொம்சன் என்பவர் தொடங்கியிருந்தார்.
தற்கொலை எண்ணம் கொண்ட குறித்த நபர் தங்கள் பேஸ்புக் குழுவில் உரையாடியபின் நன்றாக உணர்ந்ததாகவும், தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் ரே தொம்சன் கூறியுள்ளார்.
அபர்தீன் என்பது ஸ்கொட்லாந்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர் ஆகும். கடந்த ஆண்டு ஸ்கொட்லாந்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளதாக பிரிட்டன் அரசின் தேசிய சுகாதார சேவையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்தத் தரவுகளைப் பார்த்த பின்னர் தற்கொலைகளைத் தடுப்பதற்கான ஒரு குழுவை தொடங்குவது குறித்து தான் எண்ணியதாக தொம்சன் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் தம்முடன் உரையாடிய நபர் தமக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருப்பதாக கூறி, அன்றைய இரவு ஏதாவது செய்து தற்கொலை கொள்ளலாம் என்று இருப்பதாகவும் கூறியதாக தொம்சன் கூறினார்.
தங்க்ள குழுவுடன் உரையாடிய பின் அவர் முன்பைவிட நல்ல மனநிலையில் இருக்கிறார்," என்று தொம்சன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM