மரணதண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது - பிரதமர் திட்டவட்டம்

Published By: Vishnu

30 Jun, 2019 | 06:20 PM
image

(நா.தினுஷா)

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உயிர்க் கொலைகளுக்கு இடம் கிடையாது என்றும்  எந்த காரணத்துக்காகவும்  மரணதண்டனையை அமுல்படுத்த ஆதரவு வழங்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அரசியலமைப்பில் மரண தண்டனை தொடர்பான சட்ட ஏற்பாடுகள்  காணப்பட்டாலும்  வரலாற்றி எந்த தலைவர்களும்  அதனை நடைமுறைப்படுத்தவில்லை. 2016 ஐக்கிய நாடுகள் சபை  மரண தண்டனையை தடைசெய்வதற்கான யோசனையை முன்வைத்தபோது  அதற்கு இலங்கையும் இணக்கம் தெரிவித்துள்ளது. அந்த  யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  நானும்  அன்று ஆதரவளித்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொனராகலை மாவட்டத்தில்   நீர் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.  

இந்த நீர்த்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வை அடுத்து  ஒப்பேகொட பாடசாலைக்கான புதிய கட்டடம், தெலிவ மகா வித்தியாலத்தின் புதிய கட்டடம், கதிர்காமம் வரத்தக கட்டடடம் உள்ளிட்ட  இன்னும்  சில  கட்டட தொகுதிகளை  பிதரமர்  திறந்து வைத்தார். 

மாரிஅறாவ  நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை திட்டவட்டமாக அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39