வைத்தியர்  சாபியின் விசாரணை அறிக்கையை : குற்றப்புலனாய்வு  பிரிவிடத்தில்  கோரியிருக்கும்  பதில்  பொலிஸ்மா அதிபர்  

Published By: R. Kalaichelvan

29 Jun, 2019 | 04:19 PM
image

(ஆர்.விதுஷா)

குருணாகலை -போதனா  வைத்திய சாலையின்  பிரசவ  மற்றும்  மகப்பேற்று பிரிவின்  வைத்தியர்  சேகு  ஷியாப்தீன்  மொஹமட்  சாபி  தொடர்பில்  முன்னெடுக்கப்பட்ட  விசாரணை குறித்த அறிக்கையை  தன்னிடம்  சமர்ப்பிக்குமாறு  பதில்  பொலிஸ்மா  அதிபர் சந்தன  விக்கிரமரதட்ன குற்றப்புலனாய்வு  பிரிவின்  சிரேஷ்ட  பிரதி  பொலிஸ்மா  அதிபர்  டி.டபள்யு.ஆர். பீ.  சேனவிரத்னவிடம் கேட்டிருப்பதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பொலிஸ்  அத்தியட்சர்  ருவான்  குணசேகர  தெரிவித்தார்.  

வைத்தியர் சாபி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த  விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று பாராளுமன்ற  உறுப்பினர் அதுரலிய ரத்தன  தேரர்  கடந்த  வெள்ளிக்கிழமை  பொலிஸ்  தலைமையகத்தில்  முறைப்பாடு  செய்திருந்தார்.  

அந்த  முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை  மேற்கொள்ளும்  வகையில்  நாளை பதில்  பொலிஸ் மா  அதிபர்   நடவடிக்கைகளை  எடுக்கவுள்ளார்.  

வைத்தியர்  சாபி மீதான  குற்றச்சாட்டுக்கள்  தொடர்பிலான  வழக்கு விசாரணைகள் கடந்த  வியாழக்கிழமை  குருநாகல்  நீதவான் நீதிமன்றில்  விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட  போது  ,அவருக்கு  எதிராக முன்வைக்கப்பட்டுள்ள  கருத்தடை  விவகாரம்   தொடர்பிலான  குற்றச்சாட்டு குறித்து  இதுவரை சாட்சிகள்  வெளிப்படுத்தப்படவில்லை  என குற்றப்புலனாய்வுப்பிரிவு  மன்றில்  அறிவித்திருந்தது.  

அத்துடன், வைத்தியர்  சாபிக்கு  எதிராக  முன்வைக்கப்பட்ட பயங்கரவாத ,அடிப்படைவாத  அமைப்புக்களடன்   தொடர்புகளைப்பேணியதாகன குற்றச்சாட்டும்  உண்மைக்கு  புறம்பானது என  விசாரணைகளில்  உறுதியாகியுள்ளதாகவும் சி.ஐ.டி நீதிமன்றுக்கு  அறிவித்திருந்தது.

இந்தநிலையில் , வைத்தியர்  சாபி தொடர்பிலான விசாரணைகள்  முறையாக  மேற்கொள்ளப்படவில்லை என்று  அத்துரலிய  தேரரினால்   முறைப்பாடு  அளிக்கப்பட்டிருந்த  நிலையிலேயே  அறிக்கையை தருமாறு  பதில்  பொலிஸ்மா  அதிபர்  கேட்டிருக்கின்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01