மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கின்றது நோர்வே

Published By: Daya

29 Jun, 2019 | 03:18 PM
image

(நா.தனுஜா)

இலங்கை அரசுடன் அதி உயர்ந்த மட்டத்தில் மரண தண்டனை தொடர்பான கவலையை நோர்வே தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையை மீண்டும் மரண தண்டனையை அறிமுகம் செய்வதிலிருந்து விலகியிருக்குமாறு நோர்வே கேட்டுக் கொள்கிறது. 

போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கைக்கான நோர்வே தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 43 வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொடூரமான தண்டனையான மரண தண்டனையை இலங்கை மீண்டும் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளமையை இட்டு நோர்வே ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2018 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மரண தண்டனையை நிறுத்தி வைக்கும் செயற்பாட்டிற்கு ஆதரவளித்த 120 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இவ்வாக்கு மரண தண்டனைணை நிறைவேற்றுவதிலிருந்து விளக்களிக்கும் உலகலாவிய போக்குக்கு ஆதரவளிப்பதாக அமைந்திருந்தது.

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதென்பது இலங்கையின் சர்வதேச மதிப்பையும் அதனது மனித உரிமைகள் செயற்பாடு என்பவற்றை பாதிக்கும் செயலாகும்.

கொள்கை ரீதியில் அனைத்து வகையான மரண தண்டனையையும் நோர்வே கடுமையாக எதிர்க்கின்றது. அனைத்து குடி மக்களினதும் மனித உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அனைத்து நாடுகளின் கடமை என நோர்வே நம்புகிறது.

இலங்கை அரசுடன் அதி உயர்ந்த மட்டத்தில் மரண தண்டனை தொடர்பான கவலையை நோர்வே தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையை மீண்டும் மரண தண்டனையை அறிமுகம் செய்வதிலிருந்து விலகியிருக்குமாறு நோர்வே கேட்டுக் கொள்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31