சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளது என தொடுக்கப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையினை மன்றில்   சமர்ப்பிக்க வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வடமாகாண விவசாய நீர் வழங்கல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை  எனவும் நீதவான்  தெரிவித்துள்ளார்.

கழிவு ஒயில் கலப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் இடம்பெறுவதில்லை என பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள   இரண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் மேற்கண்டவாறு  உத்தரவிட்டார்.