‘கடாரம் கொண்டான் ’

Published By: Daya

29 Jun, 2019 | 09:46 AM
image

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சீயான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் ஒரு கட்டாய வெற்றியை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘தூங்காவனம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் ‘கடாரம் கொண்டான் ’என்ற இப்படத்தின் கதை, மலேசியாவை மையமாகக் கொண்டதாகவும், சென்டிமென்ட், எக்சன், திரில்லர் எண்டர்டெயின்மெண்ட் என கொமர்ஷல் அம்சங்களுடன் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்த படத்தில் சீயான் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன், மலையாள நடிகை லேனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஸ்ரீனிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜேஷ் எம் .செல்வா.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, இறுதி கட்டப் பணிகளும் முடிவடைந்த நிலையில், இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கப்பெற்ற நிலையில் இப்படத்திற்கான வெளியீட்டு திகதி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜூலை 19 ஆம் திகதியன்று இப்படத்தின் வெளியீடு உலகம் முழுவதும் இருக்கும் என்றும், ஜூலை 3ஆம் திகதி இப்படத்தின்ட்ரெய்லர் வெளியீடு இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள சீயான் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதனிடையே சீயான் விக்ரம் தற்போது இந்திய மதிப்பில் 300 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டு வரும் மஹாவீர் கர்ணா என்ற படத்திலும், டிமான்டி காலணி,இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெயரிடப்படாதபடத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35