மஹிந்தவை எவ்வாறு அழைப்பது : துமிந்த திசாநாயகவுக்கு ஏற்பட்ட சந்தேகம்

Published By: Priyatharshan

03 May, 2016 | 05:42 PM
image

(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஒரு தலைவராக கருதுவதா, அல்லது முன்னாள் ஜனாதிபதியாக கருதுவதா அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கருதுவதா என்ற கேள்வி எழுந்துள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

கட்சியின் கொள்கையை மீறிய நபர்களை விசாரித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். 

கட்சியை தூய்மைப்படுத்தி மக்களின் நம்பிக்கையை வென்ற தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அடுத்த இலக்கு. 

மஹிந்த ராஜபக்ஷ தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகின்றார். அவரால் முன்னாள் ஜனாதிபதி என்ற பெயரைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இத்தனை காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான ஆதரவாளர்கள் எந்தப்பக்கம் உள்ளனர் என்பதில் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தவர்களுக்கு இந்த மேதினக் கூட்டம் நல்லதொரு பதிலாக அமைந்திருக்கும். 

குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகின்றார். அவருடன் இருக்கும் பிழையான கூட்டணியின் கதைகளை கேட்டும், தவறான முடிவுகளை எடுத்தும் அவர் தோற்றுப்போனமை இன்று அவருக்கே வருத்தமளிக்கலாம். 

ஆனால் காலம் கடந்துள்ளது. இப்போது அவரால் முன்னாள் ஜனாதிபதி என்ற பெயரைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவரை இன்று ஒரு தலைவராக கருதுவதா, அல்லது முன்னாள் ஜனாதிபதியாக கருதுவதா அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கருதுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலைமை ஏற்படவும் அவர் பாதளத்தில் விழவும் அவருடன் இருக்கும் கூட்டணியே காரணமாகும். அதை இப்போதாவது அவர் விளங்கிக்கொள்ள வேண்டும் என அவர்  மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37