பொலனறுவை புரதான தொழில்நுட்ப நூதனசாலை ஜனாதிபதி தலைமையில் திறப்பு 

Published By: Daya

28 Jun, 2019 | 04:45 PM
image

(ஆர்.விதுஷா)

பொலனறுவை- புராதன  தொழில்நுட்ப நூதனசாலை  எதிர்வரும்  புதன்கிழமை  ஜனாதிபதி  மைத்திரியால  சிறிசேன  தலைமையில்  மக்கள் பார்வைக்காக   திறந்துவைக்கப்படவுள்ளதாக  ஜனாதிபதி மேலதிக  செயலாளர் பீ.கே.எஸ்.ரவீந்திர  தெரிவித்தார்.  

இந்நிகழ்வு காலை  9 மணியளவில்  இடம்பெறவுள்ளதுடன், அன்றைய தினத்தில் இரவு  8 மணிவரை டிஜிட்டல் தொழில் நுட்ப கண்காட்சி உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.  

அரசாங்க  தகவல்  திணைக்களத்தில்  இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எதிர்கால  சந்ததியினருக்கும் , சுற்றுலாப்பயணிகளுக்கும்  நாட்டின்   விழுமியங்களை  தெரியப்படுத்தும் வகையிலும் ,  தொழில்நுட்பத்தில்  நாம்  அடைந்திருக்கும்  மட்டத்தை  பிரதிபளிக்கும் வகையிலுமான புராதன தொழில் நுட்ப நூதன சாலை பொலனறுவையில்  நிறுவப்பட்டுள்ளது.  

இந்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டவுள்ளது.  பொலனறுவை காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகள் தொடர்பில் அனைவரும் அறிந்து கொள்ளும்  வகையிலேயே  இது நிறுவப்பட்டுள்ளது.   

பொலனறுவகால ஆரம்பம் மற்றும் வரலாற்றுக்கால  தொழில்நுட்பங்கள், அந்த  காலத்திற்குட்பட்ட மட்பாண்ட  உலோகத்தொழிநுட்பம் , விவசாய, நீர்ப்பாசன  தொழில்நுட்பம், கட்டடக்கலைத்தொழில் நுட்பம், ஓவியம், சிற்பம் மற்றும்  கணிதத்தொழில்நுட்ப முறைகள் என்பனவற்றை  அங்கு  அறிந்த கொள்ளக்கூடியதாகவிருக்கும்  90கோடி ரூபா செலவில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த  நூதனசாலையின் கட்டுமான பணிகள் 2016ஆம்  ஆண்டில்  ஆரம்பித்து வைக்கப் பட்டிருந்தன. 

இந்த நூதனசாலை 7 பிரிவுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதில் விரிவுரை மண்டபம் , செயற்பாட்டு  நிலையம் ,  நவீனமயப்படுத்தல்  நிலையம் , நூலகம்  உள்ளிட்ட நவீன வகையான  தொழில்நுட்ப  பிரிவுகளும்  உள்ளடக்கப் பட்டுள்ளன.  இதனூடாக சுற்றுலாப்பயணிகளும்,   பாடசாலை  மாணவர்களும்  பொலனறுவ காலகட்டத்தில்  பயன் படுத்தப்பட்ட தொழில்நுட்ப  முறைகளை  அறிந்து கொள்ள  கூடியதாகவிருக்கும்.  

நூலகத்தில்  சுமார்  30ஆயிரம்  புத்தகங்கள்  உள்ளதுடன்,  மேலதிக  தகவல்களை   அதனூடாக  அறிந்துகொள்ள முடியம்.  மும்மொழிகளிலும், வழிநடத்தல்  காணொளிகளினூடான  தெளிவு படுத்தல்களும்  வழங்கப்படும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47