உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த மாற்று வலுவுடைய பழைய மாணவர்கள்

Published By: Daya

28 Jun, 2019 | 03:21 PM
image

முல்லைத்தீவு வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்தின் மாற்று வலுவுடைய பழைய மாணவர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை  இன்று  ஆரம்பித்துள்ளனர்.

வள்ளிபுனம் இனியவாழ்வு இல்லத்துக்கு முன்பாக இந்த உண்ணாவிரத போராட்டம்.நடைபெற்று வருகின்றது.

முன்னதாக வள்ளிபுனம் காளிகோவிலடியிலிருந்து பேரணியாக புறப்பட்ட போராட்டக்காரர்கள் இனிய வாழ்வு இல்லத்துக்கு முன்பாக வந்து தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் ஏனைய பழைய மாணவர்களும் இணைந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

10 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

1.நிறுவன ஸ்தாபகரின் செயற்திட்டத்தில் வந்த யாப்பு பின்பற்றப்படவேண்டும்.

2. நிறுவன ஸ்தாபகரின் வழித்தோன்றல் பிரகாரம் நிறுவனம் ஒப்படைக்கப்படவேண்டும்

3.நிர்வாக நிர்வாகச் செயற்பாடுகளில் பழைய மாணவர்களை தொடர்ச்சியாக புறக்கணிப்பது நிறுத்தவேண்டும்.

4.பழைய மாணவர்களை நிபந்தனையற்ற வகையில் பொதுச்சபையில் இணைக்கப்படவேண்டும்.

5.அனைத்து பழைய மாணவர்களையும் உள்வாங்காமல் மேற்கொள்ளப்படும் யாப்பு சீர்திருத்தத்தை நிறுத்த வேண்டும்.

6.சமூக சேவைத் திணைக்களத்தின் அரச ஊழியராக இருந்து கொண்டு நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் ஒருவர் இல்லத்தின் செயற்குழுவில் இருந்து வெளியேற வேண்டும்.

 7.மக்கள் பிரதிநிதியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் செயற்குழு மற்றும் நிர்வாக பதவி நிலையிலிருந்து வெளியேறவேண்டும்.

8. 11 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவில் 5 உறுப்பினர்களாக பழைய மாணவர்கள் நிபந்தனையற்ற வகையில் இணைக்கப்படவேண்டும்.

9.மேற்குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழு ஏற்படுத்தப்படும் போது பழைய செயற்குழு உறுப்பினர்கள் இருவரும் பழைய மாணவர்கள் இருவருமாக இணைந்து குழு அமைக்கப்பட வேண்டும்.

10. 6ஆம் இலக்கம் 7ஆம் இலக்கம் ஆகிய கோரிக்கைகள் உடனடியாக செயற்படுத்தப்படவேண்டும். என்பனவாகும் .

இதன்போது கருத்து தெரிவித்த இனிய வாழ்வு இல்லத்தின் விழிப்புலன் இழந்த பட்டதாரி பழைய மானவனான பழனிசாமி ராஜ்குமார்,

இனிய வாழ்வு இல்லம்  விழிப்புல செவிப்புல வலுவிழந்த மாணவர்களுக்கான ஆதரவு மற்றும் பராமரிப்பு கல்வி வாய்ப்புக்காக 1997 ஆம் ஆண்டு விழிப்புலன் இழந்த மற்றுத்திறனாளியான கிறிஸ்து மாசிலாமணி என்பவரால் உருவாக்கப்பட்டு  தமிழீழ விடுதலை புலிகளால் நிர்வகிக்கப்பட்டு சிறப்பான வகையில் மாற்று வலுவிழந்த குழந்தைகளின்  காப்பகமாக இயங்கி வந்தது. 

2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் இந்த இல்லத்தில் கல்வி கற்று மாற்றுத் திறனாளிகளாக பல்கலை கழக பட்டதாரிகளாக வெளியேறிய வெளியேறிய சிலரின் முயற்சியில் மீள உருவாக்கப்பட்ட நிலையில் அவர்களை புறந்தள்ளி புதிய நிர்வாகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

அந்த நிர்வாகம் தான்தோன்றி தனமாக செயற்பட்டு வருவதாகவும் இல்லத்தின் ஆரம்பமுதல் அங்கே இருந்து கல்வி கற்று பட்டதாரிகளாக மாற்று வலுவுடைய 13 பேர் வெளியேறியுள்ள நிலையில் அவர்கள் எவரும் இல்லத்தின் செயற்பாடுகளில்  உள்வாங்கபடவில்லை அத்தோடு ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினராகவும் இருந்துகொண்டு இனிய வாழ்வு இல்லத்தில் மாற்று வலுவுடைய பிள்ளைகளுக்கு சேவை செய்யவென வருகைதந்து தற்போது அங்கும் ஊதியம் பெறும் பணியாளராக மாறியிருக்கின்றார். 

ஒரு நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த இல்லத்தில் சில அதிகாரம் படைத்தவர்கள் தான்தோன்றிதனமாக நடந்துகொண்டிருகின்றார்கள். இந்த நிலைமைகளை உணர்ந்து எமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என அறிவிக்கின்றோம். எமது நியாயமான கோரிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தரவேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15