நடுகாதில் ஏற்படும் பாதிப்பிற்கான சத்திர சிகிச்சை

Published By: Daya

28 Jun, 2019 | 02:02 PM
image

காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது ஆகிய மூன்று பகுதிகளில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், வைரஸ், பாக்டீரியா பங்கஸ் போன்ற தொற்றுகள் ஏற்படக்கூடும் என வைத்தியர்  வெங்கட் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சில பிள்ளைகள் நீச்சல் பயிற்சி பெறும் பொழுது அவர்களுடைய காதுகளில் fungus தொற்று ஏற்படலாம் அல்லது அவர்களின் செவிப்பறையில் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு நடுக்காதில் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக காதில் சீழ் பிடிக்கும்.  இதன் காரணமாக காது மற்றும் அதன் அருகிலுள்ள எலும்புகளை அரித்து விடவும் கூடும். இதனை வை்த்திய மொழியில் கொலஸ்ட்ரமோ என்பார்கள்.

இத்தகைய பாதிப்பு வந்தால், பாதிப்பின் தன்மையைப் பரிசோதித்து, அவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்து அதனை அப்புறப்படுத்துவார்கள். இதற்குரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் காது கேட்கும் திறன் இழப்பதுடன் மூக்கு, முகம், மூளை, தொண்டை, கண் உள்ளிட்ட பாகங்களும் பாதிக்கப்படக்கூடும். 12 வயதுக்கு உட்பட்ட சில பிள்ளைகளுக்கு காதின் பின் பகுதியில் உள்ள அடினாய்ட் பகுதியில் தொற்று ஏற்படும். இதன் காரணமாகவும் அவர்களின் காது மற்றும் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.

விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து மேலெழும்பும் மற்றும் கீழே இறங்கும் ஆகாய விமானங்கள் எழுப்பும் ஒலியின் அளவு 140 டெசிபல்.

அதேபோல் தொழிற்சாலைகளில் சில பொருட்களின் உற்பத்தியின் போது எழும் ஒலியின் அளவு 85 டெசிபல்கள். இத்தகைய தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து 85 டெசிபல் ஒலி அளவை 8 மணி நேரத்திற்கு மேலாக கேட்டால், அவர்கள் தங்களின் கேட்கும் திறன் மற்றும் காதின் அமைப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவது உறுதி.

இவர்கள் மாதம் தோறும் தங்கள் கேட்கும் திறன் குறித்து முறையான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக எம்முடைய காதின் கேட்புத்திறன் 60 டெசிபல் அளவிற்கு உள்ளாகவே இருக்க வேண்டும்.

போல் இத்தகைய ஒலி அளவிற்கும், தூரத்திற்கும் தொடர்பு உண்டு. குறிப்பிட்ட தொலைவிலிருந்து, குறிப்பிட்ட டெசிபல் அளவில் ஒலி கேட்டால் காதில் கேட்புத்திறன் சமநிலையில் இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04