உலகை உலுக்கியுள்ள புகைப்படத்தை பகிரவேண்டாம் - குடியேற்றவாசிகளிற்கான அமைப்பு

Published By: Rajeeban

28 Jun, 2019 | 12:25 PM
image

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் எல்சல்வடோரை சேர்ந்த தந்தையும் இரண்டு வயது மகளும் நீரில் மூழ்கி இறந்து கிடக்கின்ற படத்தை பகிர்ந்துகொள்ளவேண்டாம் என  குடியேற்றவாசிகள் தொடர்பான அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மெக்சிக்கோ அமெரிக்க எல்லையில் உள்ள ரியோ கிரன்டே ஆற்றுப்பகுதியில் ஒஸ்கார் அல்பேர்ட்டோ மார்டினஸ் ரமிரெஸ் தனது இரண்டுவயது மகளான வலெரியாவுடன் இறந்து கிடப்பதை காண்பிக்கும் புகைப்படம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கை பற்றிய விவாதங்களை  தீவிரப்படுத்தியுள்ளது

இதேவேளை ரியோ கிரான்டே பகுதியில் தந்தையும் மகளும்  மரணித்த நிலையில் காணப்படும் படத்தை மனிததன்மையற்றது என வர்ணித்துள்ள குடியேற்றவாசிகளிற்கு சார்பாக குரல்கொடுக்கும் அமைப்பொன்று அந்த படத்தை பயன்படுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் வெறுமனே தற்செயலாக இடம்பெற்ற துயரமி;ல்லை மாறாக அமெரிக்க எல்லையில் உருவாகியுள்ள நெருக்கடியின் விளைவு என்பதை வலியுறுத்துவதற்காக இறப்பதற்கு முன்னர் தந்தையும் மகளும்  மகிழ்ச்சியுடன் காணப்பட்ட படத்தை பயன்படுத்தப்போவதாக ரெயிசெஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தையும் மகளும் மகிழ்ச்சியுடன் காணப்படும் படத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு குடியேற்றவாசிகளாகுவதற்கு முன்னர் அவர்கள் ஒரு குடும்பமாக காணப்பட்டார்கள் என்பதை உணர்ந்துகொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் நீங்கள் இது மற்றுமொரு துயரச்சம்பவம் என மாத்திரம் கருதவேண்டும் என எதிர்பார்க்கின்றன,அவர்களை பொறுத்தவரை இது ஒரு புள்ளிவிபரம் ஆனால் நாங்கள் வேறு மாதிரிகருதுகின்றோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் குடியேற்றவாசிகளா ஆம் அவர்கள் குடியேற்றவாசிகள் ஆனால் அதற்கு முன்னர் அவர்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்தனர் என தெரிவித்துள்ள ரெயிசெஸ் அவர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு சிறந்த வாழ்க்கையை வழங்க விரும்பினார்கள் அதற்காக ஆபத்துக்களை சந்திக்க துணிந்தார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றவாசிகளிற்கு எதிரான கொள்கை காரணமாக சிறந்த வாழ்க்கையை வாழவிரும்பும் மக்களின் உயிர்கள் நெருக்கடியான நிலையில் உள்ளன என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17