பதுளை நமுனுகல வைத்தியசாலைக்கு வைத்தியர் இன்மையால் மக்கள் பாதிப்பு

Published By: R. Kalaichelvan

28 Jun, 2019 | 12:00 PM
image

பதுளை பகுதியின் நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலையில் நிரந்தரமாக சேவையாற்றக்கூடிய வைத்தியர் ஒருவரை ஈடுபடுத்தும்படி  ஊவா மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்  வைத்தியர் ஜே. சி. எம். தென்னக்கோன் மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அக்கடிதத்தில் “பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார்,  நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை நிரந்தர சேவையில் உடன் ஈடுப்படுத்தும்படியும், வைத்தியர் ஒருவர் சேவையில் இல்லாமையினால் பெருந்தோட்ட மக்கள் உள்ளிட்ட கிராமிய மக்கள் பெரும் பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

மேலும் நமுனுகல கிராமிய அரச வைத்தியசாலைக்கு  இரு வைத்தியர்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கும் , சம்பந்தப்பட்டவர்களினால் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 10ம் திகதி சேவையில் இருந்த வைத்தியர்  இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். 

இதுவரையில் அவ் நிரந்தர வெற்றிடம் பூர்த்தி செய்யப்படாமையிலேயே இருந்து வருகின்றது. 

இதனாலேயே பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மக்கள் படும் அசௌகரியங்கள் குறித்து எனது கவனத்திற்கு அடிக்கடி கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.

குறிப்பிட்ட கிராமிய வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசம் மிக பின்தங்கியுள்ள பிரதேசமாகும். ஆகையினால் இவ் வைத்தியசாலைக்கு உடனடியாக வைத்தியர் ஒருவரையாவது சேவையில் ஈடுபடுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08