உதடுகள் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை

Published By: Digital Desk 3

28 Jun, 2019 | 11:45 AM
image

ஆறு வருடங்களுக்கு முன்பு உதடுகள் இல்லாமல் பிறந்த ரஷ்ய நாட்டுக் குழந்தை டரினா ஷ்பெங்லர் உலகத்தவரால் அவலட்சணமான குழந்தையாக இது வரையில் பார்க்கப்பட்டார்.

இவரின் முக அமைப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இவர் அரிய வகை நோயினால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதன் காரணமாக டரினா ஷ்பெங்லரின் குடும்பம் சமூகத்தில் அதிகம் நெருக்கடிகளைச் சந்தித்தது. ரஷ்ய மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காததால் ஆறு வயதான டரினா ஷ்பெங்லர் தமது பெற்றோருடன் லண்டனுக்குச் சென்றுள்ளார்.

 இவருக்கு லண்டனில் அமைந்துள்ள  கிரேட் ஆர்மண்ட்  ஸ்ட்ரீட் மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த அறுவை சிகிச்சை இவரின் வாழ்க்கையை மாற்றும் எனப் பெற்றோராலும் மருத்துவராலும் நம்பப்படுகின்றது. 

இந்த சிகிச்சையின் பின்  தனது மகளுக்கும் ஏனைய குழந்தைகள் போல் சமூகத்தில் வாழ்வதற்கு வழிபிறக்கும் எனவம் தனது மகளுக்கு பேசுவதற்கான குரலைக் கொடுக்கும் எனவும் இவரின் தாயார் திருமதி ஷ்பெங்லர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right