கிரிக்கெட்டில் விராட்டின் புதிய மைல்கல்!

Published By: Vishnu

28 Jun, 2019 | 11:05 AM
image

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் சாதனை மைல்கல் ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகளுடனான மான்செஸ்டரில் நேற்றைய தினம் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டியில் விராட் கோலி மொத்தமாக 82 பந்துகளை எதிர்கொண்டு, 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 72 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதனிடையே விராட் கோலி 24.4 ஆவது ஓவரில் 37 ஓட்டங்களை பெற்றதுடன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு 20) மொத்தமாக 20 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்ற வீரர் என்ற சாதனையை பதிவுசெய்தார்.

இதற்கு முன்னர் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாராவுக்கு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ஓட்டங்களை பெற தலா 453 இன்னிங்ஸுகள் தேவைப்பட்டன. ஆனால் விராட் கோலி 417 இன்னிங்ஸுக்களை மாத்திரம் எதிர்கொண்டு இந்த சாதனையை புரிந்துள்ளார். 

30 வயதாகும் விராட் கோலி இதுவரை மொத்தமாக 224 இன்னிங்ஸ்களை எதிர்கொண்டு 11,159 ஓட்டத்தையும் 131 இன்னிங்ஸ்களை எதிர்கொண்டு 6,613 ஓட்டத்தையும், 62 இன்னிங்ஸ்களை எதிர்கொண்டு 2,263 ஓட்டத்தைதையும் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்ற வீரர் பட்டியலில் டெண்டுல்கர் மற்றும் லாரா ( 453 இன்னிங்ஸ்) இரண்டாவது, மூன்றாவது இடங்களிலும், ரிக்கி பொண்டிங் (464 இன்னிங்ஸ்) நான்காவது இடத்திலும், ஏ.பி.டி.வில்லியர்ஸ் (483 இன்னிங்ஸ்) ஐந்தாவது இடத்திலும், ஜக் கலீஸ் (491 இன்னிங்ஸ்) ஆறாவது இடத்திலும், ராகுல் ராவிட் (492 இன்னிங்ஸ்) ஏழாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35