இலங்கை அமைச்சுடன் இணைந்து அமெரிக்க நிறுவனம் மேற்கொண்ட பொருளாதார கலந்துரையாடல்

Published By: R. Kalaichelvan

27 Jun, 2019 | 04:48 PM
image

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுடன் இணைந்து சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (யு.எஸ்.எயிட்) அண்மையில் கொழும்பில் அரச மற்றும் தனியார் துறையினருக்கு உலகலாவிய வர்த்தகத்துக்கான ஒருங்கிணைப்பு எனும் தலைப்பில் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தது. 

யு.எஸ்.எயிட் எஸ்.ஏ.ஐ.எல் திட்டத்திற்கு இணங்க உலகலாவிய வர்த்தகத்துக்கான ஒருங்கிணைப்பு குறித்து இலங்கை எவ்வாறு நன்மைகளை அதிகரித்து ஆபத்துக்களைக் குறைக்க முடியும் என்ற பொருள் பற்றி இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. யு.எஸ்.எயிட் 2016 ஆம் ஆண்டில் நான்கு வருடத்திட்டமாக எஸ்.ஏ.ஐ.எல் திட்டத்தை ஆரம்பித்தது. இது இலங்கையின் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்து நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்க வழி செய்கின்றது.

அமைச்சுக்கள் , அரச நிறுவனங்கள் வர்த்தக சமூகம் , வர்த்தக மன்றங்கள் , தனியார் துறையினர் மற்றும் பங்கு சந்தையினர் என பல துறையைச் சேர்ந்த சுமார் 80 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த கலந்துரையாடல் முக்கிய விவாதத்தையும் கருத்து பரிமாற்றத்தையும் உள்ளடக்கி பாரிய வெற்றியளித்ததாகக் கூறப்படுகின்றது. 

ஏ.எஸ்.எயிடின் பொருளாதார வளர்ச்சி அலுவலகத்தின் பணிப்பாளர் பிரயன் விட்ன பெல் , அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம , இவ் அமைச்சின் செயளலார் சிசிர கொடிக்கார மற்றும் யு.எஸ்.எயிட் எஸ்.ஏ.ஐ.எல் திட்டத்தின் குழுத்தலைவர் கிளீன் மக்கொன்சி பிரேசர் ஆகியோர் முக்கிய சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினர். 

கடந்த சில வருடங்களாக வர்த்தக சீரமைப்பை மேற்கொண்டு வருவதாகவும் எமது அரசு சர்வதேச வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதன் போது தெரிவித்தார். 2015 இற்கு முன்னர் சர்வதேச வர்த்தகத்திற்கு மிகக் குறைந்த வாய்ப்பே இருந்ததாகவும் நாங்கள் ஆதிகாரத்திற்கு வந்ததும் சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டால் நாட்டில் சிறந்த வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் புதிய வர்த்தக கொள்கையை உருவாக்கியுள்ளோம். பொருளாதார சீராக்கல் இடம்பெற்று வருவதுடன் ஏற்றுமதியை அதிகரிக்க தேசிய ஏற்றுமதி மூலோபாயக் கொள்கை உள்ளது. இரு நூற்றாண்டுகளாக ஏற்றுமதி பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. 6 வகையான துறைகளுக்கு முன்னுரிமை வழங்கி 4 வர்த்தக உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மூன்று வருடங்களாக நாங்கள் சுங்க தீர்வை சலுகை வழங்கியுள்ளோம். 1200 வகை பொருட்களுக்கு சுங்க தீர்வை சலுகை வழங்கப்பட்டுள்ளன. 

மேலதிக வர்த்தக கொடுக்கல் வாங்கல் பற்றி பாராளுமன்றத்தில் கடந்த வருடம் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் சில சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை உருவாக்கியுள்ளோம். இந்தியா சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் ஆய்விலுள்ளன. 

தனியார் துறையினரின் பங்களிப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அத்துடன் தனியார் துறையினர் சர்வதேச ரீதியிலும் போட்டியிட வேண்டும் என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு விவசாயம் சுற்றுச்சூழல் தேசிய வழங்கல் உட்கட்டமைப்பு , வர்த்தக அபிவிருத்தி , சுகாதாரம் , கல்வி, நல்லாட்சி மற்றும் மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கி வருவதாக யு.எஸ்.எயிடின் பணிப்பாளர் இதன் போது குறிப்பிட்டார். 

வர்த்தக திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் திருமதி. ருவந்தி ஆரியரத்ன சுங்க திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பிரியந்த சபரமது , கட்பனிகள் பதிவாளர் உதவி பதிவாளர் ஹெஷான் மது கமகே ஆகியோரும் இங்கு உரையாற்றினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41