தாஜூதீன் படுகொலை வழக்கு : அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக  குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published By: Vishnu

27 Jun, 2019 | 01:40 PM
image

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலையுடன் தொடர்புடைய சாட்சியங்களை திட்டமிட்டு மறைத்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவை 20 இலட்சம் ரூபா என்ற இரண்டு சரீரப்பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூபாவான ரொக்கப் பிணையை மேல் நீதிமன்றத்தின் பிணையாக ஏற்பதற்கும், பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

அத்தோடு முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவின் விரல் அடையாளங்களைப் பெற்றுக் கொள்ளவதோடு, அது தொடர்பிலான அறிக்கை சமர்பிப்பதற்கும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா உள்ளிட்ட 06 சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38