ஸ்ரீல.சு.கட்சியைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர் - தயாசிறி

Published By: Vishnu

27 Jun, 2019 | 01:12 PM
image

(எம்.மனோசித்ரா)

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கட்சி மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் சகல சுதந்திர கட்சி உறுப்பினர்களும், முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தேர்லில் சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவரே வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த வேட்பாளர் யார் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம் என்று ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார். 

அத்தோடு புதன்கிழமை பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பில் இடம்பெற்ற ஆறாம் சுற்று பேச்சுவார்த்தை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆறாம் சுற்று பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04