பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்

Published By: Daya

27 Jun, 2019 | 09:32 AM
image

அதிக திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா இன்று காலமானார்.

ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். 

அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்று,  கடந்த 2002ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.  

இதனையடுத்து 2008ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக "ரகுபதி வெங்கையா" விருதினைப் பெற்றுள்ளார். இவரும், தெலுங்கு நடிகையான சாவித்திரியும்  மட்டுமே புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவர்கள் ஆவர். 

இவர்  ‘மச்ச ரேகை’ எனும் தமிழ் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி, எங்க வீட்டு பெண், பணமா பாசமா, என் அண்னன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 73 வயதான விஜய நிர்மலா, உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

மறைந்த இவருக்கு, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37