உளுந்தூர்பேட்டையை தேர்வு செய்தது ஏன் ? : விளக்கம் கூறுகிறார் விஜயகாந்த்

Published By: Robert

03 May, 2016 | 02:05 PM
image

விருத்தாச்சலமா? ரிஷிவந்தியமா என்று மக்கள் யோசித்தபோது நான் உளுந்தூர்பேட்டையை தேர்வு செய்தேன். அதற்குக் காரணம், அதிக குக்கிராமங்கள் இருப்பது தான் என்று விஜயகாந்த் கூறியுள்ளளார்.

தே மு திக வின் தலைவரும் மக்கள் நல கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான  விஜயகாந்த், அவர் போட்டியிடும் உளூந்தூர் பேட்டை தொகுதியில் நேற்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசம் போது,‘ குக்கிராமங்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்வு செய்தேன். உளுந்தூர்பேட்டையில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கலைக் கல்லூரியும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தில் தற்பொழுது ரெளடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக, திமுக கட்சிகள் மக்களைப்பற்றி சிந்திப்பதே கிடையாது. ஆனால் தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து ஊழல் செய்துள்ளனர். அந்த ஊழல்களை அவர்கள் வைத்திருக்கும் காட்சி ஊடகங்கள் வாயிலாக போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகின்றனர். எங்கள் கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்தால், தமிழகத்துக்கு சிறப்பான ஆட்சியை கொடுப்பேன்’ என்றார்.  

முன்னதாக  விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குள்பட்ட எலவனாசூர்கோட்டை, புகைப்பட்டி, எறையூர், பூண்டி, சீதேவி, சிக்காடு, எ.கொளத்தூர், கல்சிறுநாகலூர், அலங்கிரி உள்பட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் விஜயகாந்த், திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.தேமுதிக மாநில இளைஞரணிச் செயலர் எல்.கே.சுதீஷ், விழுப்புரம் தெற்கு மாவட்ட மதிமுக செயலர் க.ஜெயசங்கர் மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17