பிரதமர் ரணில் இன்று திருகோணமலைக்கு விஜயம் ; பல அபிவிருத்தித் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு 

Published By: Priyatharshan

27 Jun, 2019 | 06:14 AM
image

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று 27ஆம்திகதி வியாழக்கிழமை விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, தம்பலகாமம் சுகாதார வைத்திய நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன், வீதித் திறப்பு மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியேற்ற வீடுகளைத் திறந்து வைத்தல்,  வீ ட்டு பயளானிகளுக்கான பத்திரங்கள் வழங்கல், ஆசிரிய நியமனம் வழங்கல் ஆகிய நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார்.

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் செயற்படுத்தப்படும் இவ் அபிவிருத்தித் திட்டங்களில், தம்பலகாமம் ஆரம்ப சுகாதார நிலையம் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. 

இந்நிகழ்வுகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடைபெறவுள்ளது. 

இன்று காலை 11மணியளவில் தம்பலகாமம் சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். அடுத்து, வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த மற்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து நாடு திரும்பியவர்களுக்கான வீட்டுத்திட்டத்தின் முதல் கட்டத்தில் தம்பலகாமம் பொற்சோலை கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்ட வீடுகள் திறந்து வைக்கப்படவுள்ளன. முதல் கட்டத்தில் தலா 10 லட்சம் பெறுமதியான 400 வீடுகள் திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டிருந்தன. 

அதேநேரம், 113 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட சர்தாபுர - கன்னியா வீதி, 90 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட கன்னியா இலுப்பைக்குளம் வீதி, மற்றும் 2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இலுப்பைக்குளம் ஏ.பி.சி வீதி ஆகியனவற்றையும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க திறந்து வைக்கிறார். 

அதேநேரம், மாலை 2 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் அடிப்படையில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதமர் பிரதம அதிதியாகக்கலந்து கொள்ளவுள்ளார். 

அத்துடன், வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்த மற்றும் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து நாடு திரும்பியவர்களுக்கான வீட்டுத்திட்டத்தின் 2ம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 600 பயனாளிகளுக்கான பத்திரங்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்கிறார். இந் நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுனர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பார்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், மற்றும் அதிகாரிகள், உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38