ஈஸ்டர்  தாக்குதல் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டை தடுக்கவா - ஜனாதிபதி  சந்தேகம்

Published By: R. Kalaichelvan

26 Jun, 2019 | 06:30 PM
image

(இராஜதுரை ஹஷான்)

போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட  செயற்திட்டங்களை  தடுக்கும் வகையில் ஈஸ்டர் தின தாக்குதல்  முன்னெடுக்கப்பட்டதா  என்ற சந்தேகம்  காணப்படுவதாக தெரிவித்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  குறித்த  தாக்குதலின் பின்னர் பொது மக்களின் மத்தியில் மிகவும் மோசமான   முறையில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பிற்கு  கடந்த காலங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. முக்கிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் குறுகிய  காலத்தில்   கைது செய்யப்பட்டுள்ளார்கள் . இவ்விடயத்தில் அனைவரது  ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கப் பெற்றன.

வெற்றிகரமாக முன்னெடுத்து  சென்ற   திட்டங்கள் அனைத்தும்  ஏப்ரல் மாதம் 21ம் திகதி குண்டு தாக்குதலுக்கு பின்னர்  இடை நிறுத்தப்பட்டது.   

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு  சர்வதேச மட்டத்தில் தொடர்பு காணப்படுகின்றது.  எமது   இலக்கிற்கு  தடைகளை ஏற்படுத்தும் முகமாகவே குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்ற  சந்தேகம் காணப்படுகின்றது.

 ஏனெனில்   போதைப்பொருள் கட்டததல்காரர்களுக்கு   அரசாங்கத்தை அமைக்கவும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியுமாயின்  போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிரான முன்னெடுக்கப்படும்  நடவடிக்கைகளையும் இல்லாதொழிக்க முடியும்.

போதைப்பொருள் பாவனையினை முற்றாக  இல்லாதொழிக்க வேண்டுமாயின்   மரண தண்டனையே   தீர்வாக அமையும் என்று கருதப்பட்டு மரண தண்டனையினை நிச்சயம் அமுல்படுத்துவேன் என்று   வழங்கிய  வாக்குறுதிகளை நிறைவேற்ற  மரண  தண்டனையினை நிறைவேற்ற  கைச்சாத்திட்டுள்ளேன். 

இன்னும்  இரண்டு வார காலத்திற்குள்  போதைப்பொருள்  கடத்தல்காரர்களுக்கு மரண  தண்டனை  நிறைவேற்றப்படும்.

பிலிப்பைன்ஸ்  நாட்டில் போதைப்பொருள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.  அந்நாட்டு ஜனாதிபதி   எவ்வித சட்ட  நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல்   போதைப்பொருள்  குற்றச்சாட்டுடன் தொடர்புடைய  27000 ஆயிரம் பேருக்கு மரண  தண்டனையினை  நிறைவேற்றினார்.  ஆனால் இவ்வாறு  நாம் செயற்பட முடியாது.   அனைத்து விடயங்களும்  சட்ட வழிமுறைகளின் ஊடாக   முன்னெடுக்கப்பட வேண்டும்.  

மரண தண்டனையை வழங்க  தீர்மானிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும்     சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13