மேற்கத்தேய நாடுகளின் தேவையை நிறைவேற்றுவதே பாக்கியசோதி சரவணமுத்துவின் நோக்கம் - விமல்

Published By: Daya

26 Jun, 2019 | 04:40 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மேற்கத்தேய நாடுகளின் தேவைக்கேற்றவகையில் பொலிஸாரை இயக்குவதற்கே பாக்கியசாேதி சரவணமுத்து போன்றவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதற்காகவே இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவர இவர்கள் பாடுபட்டனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணி கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அஸ்கிரி மகாநாயக்க தேரர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து அரச சார்ப்பற்ற நிறுவனங்களில் முகவராக  செயற்படும் பாக்கியசோதி சரவணமுத்து பொலிஸில் முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருக்கின்றார். ஆனால் கடந்த காலங்களில் இந்த நாட்டில் சிங்கள பெளத்தர்களை காேபமூட்டும் வகையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்,  சிவாஜிலிங்கம் போன்றவர்கள் செயற்பட்டு வந்திருக்கின்றனர்.

ஆனால் பயங்ரவாத தாக்குதலுக்கு எதிராகவும் அதில் மரணமடைந்த, காயமுற்றவர்களுக்கு எதிராக குரல்கொடுக்காதவர்களே இன்று அஸ்கிரி மகாநாயக்க தேரரின் கூற்றொன்றை பிடித்துக்கொண்டு திரிகின்றனர். அத்துடன் இவர்கள் தேரர்களுக்கு எதிராக செயற்பட சிறியவிடயமொன்றேனும் கிடைத்தால் அதனை அடிப்படையாகக்கொண்டு செயற்படுவார்களே தவிர,  பிற மதத்தவர்களுக்கு எதிராக ஏற்படும் அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பவர்கள் அல்ல. 

அத்துடன் அஸ்கிரி மகாநாயக்க தேரருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடும் பிழையாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது வைத்தியர் சாபியின் நடவடிக்கைக்கு,  அவரை கல்லெறிந்து கொலைசெய்யவேண்டும் என அதிகமானவர்கள் தெரிவிக்கின்றனர் என்றே தேரர் தெரிவித்துள்ளார். அந்த கருத்தை மகாநாயக்க தேரர் தெரிவித்ததாகவே முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் மகாநாயக்க தேரர் அவ்வாறு தெரிவித்திருந்தாலும்  எமது நாட்டில் அவ்வாறுதண்டனை வழங்கப்படுவதில்லை. இஸ்லாமிய நாட்டிலே இந்த தண்டனை வழங்கப்படுகின்றது. இங்கு ஷரிஆ சட்டம் இருந்தால்தான் கல்லெறிந்து கொலைசெய்யும் தண்டனை வழங்கலாம். வைத்தியர் சாபியின் தவறின் பாரதூரத்தை காட்டவே அவ்வாறு தெரிவித்திருக்கவேண்டும். மாறாக உண்மையில் கல்லெறிந்து கொலைசெய்வதல்ல. 

எனவே மேற்கத்திய நாடுகளின் தேவைக்கேற்றவகையில் பொலிஸாரை இயக்குவதற்கே பாக்கியசாேதி சரவணமுத்து போன்றவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதற்காகவே இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவர இவர்கள் பாடுபட்டனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15