தாய்க்கருகில் உறங்கிய குழந்தை மாயம்: 500 மீற்றர் தொலைவிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Published By: J.G.Stephan

26 Jun, 2019 | 03:19 PM
image

இந்தியா, கரியகவுண்டனூரை சேர்ந்தவரே கனகராஜ் இவருக்கு வயது 38. இவரது மனைவி காஞ்சனா (21). இவர்கள் விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு அரும்பதா என்ற 2½  வயத பெண் குழந்தையொன்றும் உள்ளது. 

காஞ்சனாவின் தாயார் பேச்சியம்மாள் வீடு விளாங்குறிச்சி பழனியப்பன் தோட்டத்தில் உள்ளது. அங்கு காஞ்சனா தனது மகளுடன் சென்றுள்ளார். கனகராஜ் அன்னூரில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க சென்று விட்டார். அன்றிரவு தாயார் வீட்டில் காஞ்சனா தங்கினார். காஞ்சனாவின் உறவினர்கள் 2 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். அனைவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள். அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை அரும்பதாவுக்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். அதன்பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து பார்த்த போது அருகில் படுத்திருந்த குழந்தை அரும்பதாவை காணாத நிலையில் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காஞ்சனா மற்றும் உறவினர்கள் வீட்டின் அருகே குழந்தையை தேடிப்பார்த்தனர்.

அப்போது வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில் கருவேலங்காட்டு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அரும்பதா கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிலர் கயிற்றைக்கட்டி கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை தூக்கினார்கள். குழந்தை மயங்கி இருப்பதாக நினைத்து அருகில் இருக்கும் தனியார் வைத்தியசாலைக்ககு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

சம்பவம் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார்கள். குழந்தை அரும்பதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், 2½ வயது பெண் குழந்தை பாழடைந்த கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.  சம்பவம் நடந்த இரவு வீட்டில் இருந்தவர்கள் யார்-யார் என்று பொலிஸார் விசாரித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குழந்தை அரும்பதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தெகம் வெளியிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52