கடத்தல்கார்களுக்கு பொலிஸார் உதவுகின்றனர் என்ற கறையை பொலிஸாரே நீக்க வேண்டும் - அங்கஜன்

Published By: Daya

26 Jun, 2019 | 12:33 PM
image

போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு பொலிஸார் உதவுகின்றனர் என்ற கறையை இல்லாமல் செய்வதற்கு முயல வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கலாச்சாரம், கட்டுப்பாடு, கல்வி என்பவற்று பெயர் எடுத்த வடமாகாண இன்று போதைப் பொருகள் ஏனைய மாவட்டங்களுக்கு கடத்தப்படும் நிலையமாக மாறிவருகிறது. 

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் உருவாக்கப்பட்டிருக்கும் போதைப் பொருளுக்கு எதிரான இந்த வேலைத் திட்டமானது எமது மாகாணத்திற்கு பொருத்தமானதாக இருக்கின்றது. 

இவற்றிலிருந்து நாம் முழுமைாயாக விடுபடுவதற்கு பொலிஸார், இராணுவத்தைச் சேர்ந்த முப்படையினர், இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

மேலும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்னையில் ஈடுபடுகின்றவர்களை பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டாலும், மறுநாளே விடுதலையாகி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலைியில், போதைப் பொருள்ள கடத்தல் காரர்களுக்கு பொலிஸார் உடந்தையாக இருக்கின்றனரா என்ற ஐயப்பாடு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுகின்றது எனத் தெரிவித்த அங்கஜன் இந்தக் கருத்தினை பொலிஸார் இல்லாமல் செய்ய முலய வேண்டும்.

இதற்கு பதிலளித்த பொலிஸார், நாங்கள் அவ்வாறு செயற்படுவதில்லை. எங்களால் கைது செய்யப்படும் சந்த நபர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்குத் தாக்கல்  செய்யப்படும். இந்நிலையில், அவர் பணத்தினை செலுத்தி பிணையில் வெ ளிவந்து விடுகின்றார். அத்துடன் நாம் குற்றவாளியை இனம் கண்டு கைது செய்ய செல்லும் போது நாம் வரும் தகவலை முதலே அறிந்து கொண்டு தப்பிவிடுகின்றனர் எனத் தெரிவித்துடன், மேலும் போதைப் பொருள் கடத்தல் காரர்களுடன் பொலிஸார் தொடர்புகளை பேணுவது குறித்து தெரிந்தால் அது தொடர்பில் மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றனர். 

இதற்கு பதிலளித்த அங்கஜன், இவ்வாறான சம்பங்கள் உண்மையில் நடைபெறுகின்றது என்று நால் சொல்லவில்லை. ஆனால், பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான ஒரு கருத்து உருவாகியுள்ளது. ஆகவே அதனை இல்லாமல் செய்யும் பொறுப்பு பொலிஸாராகிய உங்களிடம் இருக்கின்றது. மேலும் குற்றவாளிகள் பிணையில் வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால், அவர்களை மீண்டும் மீண்டும் கைது செய்யுங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27