கமக்கார பெண்கள் அமைப்பின் தலைவி மீது காத்தான்குடி நபர் தாக்குதல்

Published By: Digital Desk 4

26 Jun, 2019 | 11:39 AM
image

வவுனியாவில் கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியான இரண்டு பிள்ளைகளின் தாயாரான புனிதலோஜினி மீது அரசியல் கட்சியின் ஆதரவாளர் ஒருவர்  தாக்குதல் நடத்தியதில் அவர் தலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஆசிகுளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொது அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது மதுபோதையில் அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சனசமூக நிலைய செயலாளரும் கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியுமான இரண்டு பிள்ளைகளின் தாயாரான புனிதலோஜினி மீது தாக்குதல் நடத்தியதில்  அவர் தலையில் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அவரைக்காப்பாற்றச் சென்ற ஆண் ஒருவரும் தாக்குதலில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வவுனியா ஆசிகுளம் பகுதியில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் பொது நோக்கு மண்டபத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவரை அவதூறாக பேசிய நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அங்கு பல்வேறு பொது அமைப்புக்கள் கலந்துகொண்டனர். 

அப்போது அந்நபருக்கு நெருங்கியவர் மதுபோதையில் அங்கு சென்ற கட்சியின் ஆதரவாளரும் காத்தான்குடியில் பெண்ணைத் திருமணம் செய்த ரஞ்சித்குமார் என்பவரே தாக்குதல் நடத்தியதுடன் அங்குள்ள பெண்களை தகாத வார்த்தைப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளார். 

இதன்போது மாதர் சங்கம் மற்றும் சமுர்த்திச்சங்க உறுப்பினர்களான பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தொலைபேசியில் பொலிசாருடன் தொடர்புகொண்டுள்ளதுடன் அதன் பின்னர் மக்களிடம் எனக்கு இருக்கும் பணத்திற்கும் எனக்கு இருக்கும் பொலிஸ், அரசியல் செல்வாக்கிற்கும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் உங்கள் அனைவரையும் வீடு புகுந்து வெட்டுவேன் என்று எச்சரித்துவிட்டு சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்திற்கே சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன் பின்னர் பொலிசார் அவரை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இன்று காலை குறித்த நபர் தன்னையும் தாக்கியதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்த பெண் விபத்துப்பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது குறித்த விசாரணைகளை பொலிசார் பக்கச்சார்பின்றி நடத்தி வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09