பெங்களூரின் வெற்றியை தட்டிப்பறித்த ரஸல், பத்தான் ஜோடி

Published By: Raam

03 May, 2016 | 11:53 AM
image

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடை­பெற்ற விறு­வி­றுப்­பான போட்­டியில் பத்தான் மற்றும் ரஸலின் அதி­ர­டியில் பெங்­க­ளூரின் வெற்­றியை பறித்­தது கொல்­கத்தா அணி.

கோஹ்லி தலை­மை­யி­லான பெங்­களூர் மற்றும் கம்பீர் தலை­மை­யி­லான கொல்­கத்தா அணிகள் மோதிய நேற்­றைய போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பெங்­களூர் அணிக்கு ராகுலும்,கெய்லும் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னார்கள். மோர்கல் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து ரசி­கர்­களை பர­வ­சப்­ப­டுத்­திய கெய்ல் அடுத்த பந்­தி­லேயே ஆட்­ட­மி­ழந்து அதிர்ச்­சி­ய­ளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லியும், ராகுலும் சீரான வேகத்தில் ஆடி ஓட்­டங்­களைக் குவித்­தனர். ராகுல் 52 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார்.

பின்னர் கள­மி­றங்­கிய டி வில்­லியர்ஸ் வாண­வே­டிக்கை காட்­டுவார் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் நான்கு ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

சிறப்­பாக ஆடி வந்த கோஹ்­லியும் 52 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். இதனை அடுத்து கள­மி­றங்­கிய வொட்சன் (34), சச்சின் பேபி(16) மற்றும் பின்னி (16) ஆகியோர் அதி­ர­டி­யாக ஆடி ஓட்­டங்­களைக் குவித்­ததால் பெங்­களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்­கெட்­டுக்களை இழந்து 185 ஓட்­டங்­களை எடுத்­தது.

186 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கொல்­கத்தா அணி கள­மி­றங்­கி­யது. இதில் உத்­தப்பா ஓரு ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழக்க கம்பீர் (37),லைன் (15), பாண்டே(8) என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க 69 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து தடு­மா­றி­யது கொல்­கத்தா.

கடை­சியில் ஜோடி சேர்ந்த ரஸல் மற்றும் யூஸுப் பத்தான் ஜோடி அணியை சரி­வி­லி­ருந்து மீட்­டது. இந்த ஜோடி அதி­ர­டி­யாக ஆடி அணியை வெற்­றிப்­பா­தைக்கு இட்­டுச்­சென்றது. இறு­தியில் 19.1 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை மாத்திரம் இழந்து 189 ஓட்­டங்­களைப் பெற்று பெங்­களூர் அணியை வீழ்த்தியது கொல்கத்தா.

இதில் அதிரடி காட்டிய பத்தான் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களைப் பெற்றார். ரஸல் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41