தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் ஏழு பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறிய தமிழ் மக்களை அவர்களது தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துடன் இணைந்து அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 பேரே இன்று இலங்கைக்கு மீளத் திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.