கல்வி வலய உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆவணங்களை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதிபர் குற்றச்சாட்டு

Published By: Digital Desk 4

25 Jun, 2019 | 01:38 PM
image

பரிசீலனை என்ற போர்வையில் பதுளை பாத்திமா முஸ்லீம் மகளீர் கல்லூரிக்குச் சென்ற பதுளை கல்வி வலய உத்தியோகஸ்தர்கள் குழு அக்கல்லூரியிலிருந்து தனிப்பட்ட மற்றும் கல்லூரியின் உள்ளார்ந்த விடயங்கள் அடங்கிய கோவைகளை இரகசியமாக எடுத்துச் சென்றுள்ளதாகக் கல்லூரி அதிபர் எம்.ஏ. ஹய்ருப் நிசா குறிப்பிட்டார்.

Related image

மேலும் இவ்விடயம் தொடர்பாக ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா உள்ளிட்ட கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் மேலும் கூறினார்.

கடந்த 13 ஆம் திகதி (13-06-2019 )பதுளை வலயக் கல்வி அதிகாரிகள் குழுவினர் கல்லூரி பரிசீலனை என்ற பெயரில், கல்லூரிக்குள் நுழைந்தனர். அதையடுத்து மேற்கொண்ட பரிசீலனையின் பின்னர், கல்லூரியின் முக்கிய கோவைகளையும் எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இப்பரிசீலனை இடம்பெறுகையில் கல்லூரியில் உள்ளார்ந்த முக்கிய கூட்டம் இடம்பெற்றதால் பரிசீலனையை மேற்கொள்ளுமாறு வலயக் கல்வி அதிகாரிகளிடம் கூறிவிட்டுத் தான் கூட்டத்திற்குச் சென்று விட்டதாகக் கல்லூரி அதிபர் தெரிவித்தார். 

கூட்டம் முடிந்து நான் கல்லூரி அலுவலகத்திற்குச் சென்று கோவைகளைப் பரிசீலனை செய்த போது முக்கிய சில கோவைகளை அங்குகாணவில்லை. அது குறித்து கல்லூரி அலுவலக உதவியாளரிடம் வினவியபோது பரிசீலனை செய்த வலயக் கல்வி அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறினார்.

இதையடுத்து,  நான் உடனடியாக கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தைக் கூட்டி விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளேன். கல்லூரிக்குக் களங்கத்தை ஏற்படுத்த இக் கோவைகளை எடுத்துச் சென்றிருப்பார்களோ என்ற சந்தேகமும் தனக்கு ஏற்பட்டிருப்பதாக அதிபர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46