நாட்டைக் கட்டியெழுப்பவேண்டுமெனில் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் - மஹிந்த

Published By: Daya

25 Jun, 2019 | 01:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முறையான ஒரு  நாட்டை கட்டியெழுப்பவேண்டுமாயின் முழு அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்துள்ள  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு  ஆதரவினையும் வழங்குவோம்.  நாட்டின் அதிகார  பங்கீட்டையும்,  அதன் தொழிற்பாட்டையும்   நிர்ணயிக்க  கூடிய  கொள்கைகள் அடங்கிய அடிப்படை சட்டமாக  காணப்பட  வேண்டிய அரசியலமைப்பு இன்று பல குறைப்பாடுகளைக் கொண்டு சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே முறையான ஒரு  நாட்டை   கட்டியெழுப்ப வேண்டுமாயின் முழு அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நேற்று  இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 

நல்லாட்சி  அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் கடந்த நான்கு வருடகாலமாக பயனடைந்துள்ளது என நாட்டு தலைவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள கூடியது.  அரசாங்கத்தின் ஸ்தீரனமற்ற  தன்மைக்கு  அரசியலமைப்பின் 18ஆவது, 19ஆவது திருத்தங்கள்  வழிகளை ஏற்படுத்தியுள்ளது  என்பதை கவனிக்கவேண்டும்.

அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்திய காலக்கட்டத்தில் அரசியலமைப்பினை  மையப்படுத்தி எவ்வித அரசியல் நெருக்கடிகளும் ஏற்படவில்லை. அரச அதிகாரம் தொடர்பிலும் எவ்வித  முரண்பாடுகளும் ஏற்படவில்லை. மாறாக மக்கள் ஆணைக்கே மதிப்பளிக்கப்பட்டது.

குறுகிய சில விடயங்களை  மையப்படுத்தி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்தம் நடைமுறைப்படுத்திய காலத்தில்  இருந்தே அரசியல் அதிகாரத்தில் போட்டித்தன்மை காணப்பட்டதுடன், பதவி நிலைகளின் அதிகாரங்கள் தொடர்பிலும் பல சவால்கள் எழுந்தன.  இத்திருத்தத்தின் குறைப்பாடுகளை  புதிதாக ஒன்றும்  குறிப்பிடுவது அவசியம் கிடையாது.   

மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்துள்ள  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு  ஆதரவினையும் வழங்குவோம்.  நாட்டின் அதிகார  பங்கீட்டையும்,  அதன் தொழிற்பாட்டையும்   நிர்ணயிக்க  கூடிய  கொள்கைகள் அடங்கிய அடிப்படை சட்டமாக  காணப்பட  வேண்டிய அரசியலமைப்பு இன்று பல குறைப்பாடுகளைக் கொண்டு  சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே முறையான ஒரு  நாட்டை   கட்டியெழுப்ப வேண்டுமாயின் முழு அரசியலமைப்பும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04