ஒருமைப்பாடு மாத்திரமே மக்களின் பாதுகாப்பிற்கான அடிப்படையாகும் - ரில்வின் சில்வா

Published By: J.G.Stephan

25 Jun, 2019 | 04:07 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் வாழும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ இனத்­த­வரின் மத்­தியில் ஒரு­மைப்­பாடு ஏற்­பட்டால் மாத்­தி­ரமே மக்­களின் பாது­காப்பு உறு­தி­யா­ன­தாக இருக்கும். இனங்­க­ளுக்கு இடை­யி­லான தேசிய ஒற்­று­மையே மக்கள் பாது­காப்­புக்கான அடிப்­ப­டை­யாகும் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்­தி­ருக்­கிறார்.

மதம் சார்ந்த தீவி­ர­வாத வெறித்­த­னத்­தையும் இன­வா­தத்­தையும் தோற்­க­டித்து தேசிய பாது­காப்பு மற்றும் பொது­மக்கள் பாது­காப்­பையும் தேசிய ஒற்­று­மை­யையும் உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோச­னைகள் நேற்று திங்­கட்­கி­ழமை மரு­தா­னை­யி­லுள்ள சமூக, சமய நடு­நி­லை­யத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிகழ்வில் வைத்து மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் டில்வின் சில்­வா­வினால் தொழிற்­சங்கப் பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்­கி­வைக்­கப்­பட்டது. 

அந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய போதே ரில்வின் சில்வா இவ்­வாறு குறிப்­பிட்டார். மேலும் கூறு­கையில்:

உயிர்த்த ஞாயி­று­ தினம் நடத்தப்பட்ட குண்­டுத்­தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டில் அது­வரை காலமும் பேசு­பொ­ரு­ளாக காணப்­பட்ட விட­யங்கள் பின்­தள்­ளப்­பட்டு, அனை­வ­ருக்­கு­மான பொதுச்­சட்­டங்­களின் தேவை உள்­ளிட்ட வேறு­பல விட­யங்கள் குறித்துப் பர­வ­லாகப் பேசப்­பட்டு வரு­கின்­றன. பெருந்­தோட்ட தொழி­லாளர் சம்­பள உயர்வு, பட்டம் பெற்ற இளை­ஞர்­களின் வேலை­யில்லாப் பிரச்­சினை உள்­ள­டங்­க­லாக பொது­மக்கள் தமது உரி­மை­களைக் கோரி நடத்­திய போராட்­டங்கள் தாக்­கு­தலின் பின்னர் வலு­வி­ழந்­தன.

குண்­டுத்­தாக்­கு­தல்­களால் மக்கள் பெரு­ம­ளவில் அச்­ச­ம­டைந்­தனர். அதனைப் பயன்­ப­டுத்தி சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன­வா­தத்தைத் தூண்டி, தமது தனிப்­பட்ட அர­சியல் நலன்­களை அடைந்­து­கொள்ளும் நோக்கில் பல அர­சி­யல்­வா­திகள் செயற்­பட்­டனர். இன­வாதம் தானா­கவே ஏற்­பட்­டது என்­பதை விடவும், அதனை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டது என்றே கூற­வேண்டும்.

 நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்பில் இடம்­பெற்­று­வந்த விவா­தங்கள் திசை­மாறி, நாட்டைப் பாது­காப்­பது குறித்து இடம்­பெற ஆரம்­பித்தது. உண்­மையில் இது தேசிய பாது­காப்பு தொடர்­பான பிரச்­சினை அல்ல, மாறாக மக்­களின் பாது­காப்பு பற்­றிய பிரச்­சி­னையே ஆகும்.

எமது நாட்டைப் பிறி­தொரு நாடு ஆக்­கி­ர­மிப்­ப­தற்கோ அல்­லது நாட்டைப் பிரிப்­ப­தற்கோ முற்­படும் சந்­தர்ப்­பங்­களே தேசிய பாது­காப்பு மீதான சிக்­கல்­களை எழுப்பும். இந்­நி­லையில் சில அர­சி­யல்­வா­திகள் ஒரு­புறம் இன­வா­தத்தைத் தூண்­டி­ய­வாறு, மறு­புறம் மக்­களின் பாது­காப்பு தொடர்பில் தமக்கு மாத்­தி­ரமே அக்­கறை இருக்­கின்­றது என்று கூறிக்­கொள்­கி­றார்கள்.

நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ இனத்தவரின் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டால் மாத்திரமே மக்களின் பாதுகாப்பு உறுதி யானதாக இருக்கும். இனங்களுக்கு இடையிலான தேசிய ஒற்றுமையே மக்கள் பாதுகாப்பிற்கான அடிப் படையாகும் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12