கிழக்கு தமி­ழர்­களின் மாற்று தேர்வு தேரர்­க­ளாக இருக்­கக்­கூ­டாது - மனோ

Published By: Digital Desk 3

25 Jun, 2019 | 09:59 AM
image

தமிழ் தலை­மை­களின் இய­லாமை கார­ண­மா­கவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடு­கி­றார்கள் என்­பது மறுக்க முடி­யாத உண்மை. ஆனால் கிழக்கு தமி­ழர்­களின் மாற்று தேரர்கள் அல்ல அதேபோல் தமி­ழர்கள் இந்த நிலைக்கு தள்­ளப்­பட்டு, தேரர்கள் உள்ளே நுழைந்­த­மைக்கு பிடி­வா­த­கார முஸ்லிம் தரப்­பி­னரும் பொறுப்­பேற்க வேண்டும். இதற்­கான விளைவு விரைவில் அனை­வ­ரையும் சுடும் என்று தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான  மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து தனது முக­நூலில் பதி­வொன்றை இட்­டுள்ள அவர் அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நான் வரித்­துக்­கொண்ட அர­சியல் நாக­ரி கம் ஒன்று இருக்­கி­றது. எனது கொள்­கையை விட்டுக் கொடுக்­கா மல், இயன்­ற­வரை அனை­வ­ரையும் அன்­பு டன் நிதா­ன­மாக அனு­ச­ரித்து போவேன். அப்­ப­டித்தான் நான், த.தே.கூட்­ட­மைப்­பை யும் அர­வ­ணைத்து அனு­ச­ரித்து போகிறேன். அத ­னால்தான் கல்­முனை மக்­களின் அழைப்பின் பேரில் கல்­மு­னைக்கு போக முடிவு செய்த போது கூட்­ட­மைப்பின் அம்­பாறை எம்.பி. கோடீஸ்­வ­ரனை அழைத்து சொன்னேன்.

அவர்தான் நண்பர் சுமந்­திரன் எம்.பி.யை, வஜிர அமைச்­சரின் உறுதி கடி­தத்­துடன் கூட்டி வாருங்கள் அண்ணா என்று என்னை வலிந்து கேட்­டுக்­கொண்டார்.

ஆகவே நான்தான் நண்­பர்கள் தயாகம­ கே­வையும், சுமந்­தி­ர­னையும் கல்­மு­னை க்கு அழைத்து வந்தேன். அங்கே சுமந்­தி­ர­னுக்கு கிடைத்த எதிர்­மறை வர­வேற்பை நான் வெறுக்­கிறேன். எனக்கு நேர்­மறை வர­வேற்பு கிடைத்­தது, என்­ப­தற்­காக சுமந்­தி­ரனை தாக்க முயன்­றதை நான் ஒரு­போதும் ஏற்க முடி­யாது. த.தே.கூ. பல விட­யங்­களை கோட்டை விட்­டுள்­ளது என்­பது உண்மை. ஆனால் அதற்­கான பதில் இது­வல்ல.

அதேபோல், மக்­களால் தெரிவு செய்­யப் ­பட்ட அரசியல்வாதிகளை நிராகரித்து விட்டு, பெளத்த தேரர்கள் கூறியதன் பேரில் போராட்டத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் முனைவது சரியானதல்ல.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04